Latest Updates
-
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க..
4 தக்காளி இருந்தா.. மதியம் வீடே மணக்குற அளவுக்கு இப்படி தக்காளி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க..
Thakkali Biryani Recipe In Tamil: மதிய வேளையில் சிம்பிளாக சமையலை முடிக்க நினைக்கிறீர்களா? அதே சமயம் வீட்டில் உள்ளவர்களின் பாராட்டைப் பெறும் வகையில் ருசியான ஒரு சமையலை செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் பாசுமதி அரிசியும், 4 தக்காளியும் உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு வீடே மணக்கும் அளவில் தக்காளி பிரியாணியை செய்து சாப்பிடுங்கள்.
இந்த தக்காளி பிரியாணி ஒரு ஒன்பாட் ரெசிபி என்பதால், காலையில் குழந்தைகளுக்கு லன்ச்பாக்ஸிற்கும் செய்து கொடுக்கலாம். இந்த ஒரு சிம்பிளான தக்காளி பிரியாணி சிக்கன் பிரியாணியே தோற்கும் அளவில் ருசியாக இருக்கும். அதோடு இது செய்வதற்கு மிகவும் ஈஸியாகவும் இருக்கும் என்பதால் பேச்சுலர்களும் இதை ட்ரை செய்யலாம்.

உங்களுக்கு தக்காளி பிரியாணியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி பிரியாணி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பாசுமதி அரிசி - 250 கிராம் (நீரில் 20-25 நிமிடம் ஊற வைக்க
வேண்டும்.)
* தக்காளி - 4 (நறுக்கியது)
* வெங்காயம் - 3 (நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 4-5 (கீறியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* புதினா - 1/2 கைப்பிடி
* கொத்தமல்லி - 1/2 கைப்பிடி
* கறிவேப்பிலை - சிறிது
* தயிர் - 100-150 மிலி
* எண்ணெய் - 100 மிலி
* நெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* கிராம்பு - 3
* பச்சை ஏலக்காய் - 3
* கருப்பு ஏலக்காய் - 3
* பிரியாணி இலை - 2
* பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை,
கிராம்பு, பச்சை மற்றும் கருப்பு ஏலக்காய், பிரியாணி இலை மற்றும்
சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் மற்றும் கீறி வைத்துள்ள
பச்சை மிளகாய் சேர்த்து, வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வரும் வரை
வதக்க வேண்டும்.
* பின்பு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் தக்காளியை சேர்த்து, ஒருமுறை வதக்கி, பின் அதில்
மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள் மற்றும் மல்லித் தூள், புதினா,
கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து 2 நிமிடம் வதக்க
வேண்டும்.
* பிறகு அதில் தயிரை சேர்த்து கிளறி, 1 கப் அரிசிக்கு 1 1/4 கப்
தண்ணீர் என்ற வீதத்தில் தண்ணீர் ஊற்ற வேண்டும்.
* அதன் பின் சுவைக்கேற்ப உப்பு மற்றும் சிறிது முந்திரி பருப்பை
சேர்த்து கிளறி விட வேண்டும்.
* பின்னர் அதில் பெருங்காயத் தூள் சேர்த்து கிளறி விட வேண்டும்.
* அடுத்து அதில் ஊற வைத்துள்ள பாசுமதி அரிசியை கழுவி சேர்த்து கிளறி,
குக்கரை மூடி, மிதமான தீயில் வைத்து, 2-3 விசில் விட்டு இறக்க
வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய்
ஊற்றி கிளறினால், சுவையான தக்காளி பிரியாணி தயார்.



Click it and Unblock the Notifications











