Latest Updates
-
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்!
Thaipusam 2026: பாசிப்பருப்பும், ஜவ்வரிசியும் இருந்தா.. தைப்பூசம் நாளில் 5 நிமிடத்தில் இந்த பாயாசம் செய்யுங்க!
Thaipusam 2026 Special Recipe In Tamil: முருகப்பெருமானுக்கு உகந்த தைப்பூசம் வரப்போகிறது. இந்நாளில் முருக பக்தர்கள் விரதமிருந்து முருகப்பெருமானுக்கு பிடித்ததை பிரசாதமாக செய்து படைத்து சிறப்பு வழிபாடுகளை செய்வார்கள். பொதுவாக ஒரு விஷேச நாட்களில் வீட்டில் வடை பாயாசத்துடன் சமைத்து சாப்பிடுவோம்.
தைப்பூச தினத்தன்று உங்கள் வீட்டில் பாயாசம் செய்ய போகிறீர்களா? அப்படியானால் வழக்கமாக செய்யும் பாயாசத்தை செய்யாமல், ஒரு முறை ஜவ்வரிசி மற்றும் பாசிப்பருப்பு கொண்டு பாயாசம் செய்யுங்கள். அதுவும் இந்த பாயாசம் செய்ய 5 நிமிடம் போதும் மற்றும் இதன் சுவை மிகவும் பிரமாதமாக இருக்கும்.

உங்களுக்கு ஜவ்வரிசி பாசிப்பருப்பு பாயாசத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஜவ்வரிசி பாசிப்பருப்பு பாயாசம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பாசிப்பருப்பு - 1/2 கப்
* ஜவ்வரிசி - 1 கப்
* தண்ணீர் - 3 கப்
* உப்பு - 1 சிட்டிகை
* ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
* முந்திரி - 8
* உலர் திராட்சை - 8
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* தேங்காய் பால் - தேவையான அளவு
வெல்லப்பாகுவிற்கு...
* பொடித்த வெல்லம் - 1 3/4 கப்
* தண்ணீர் - 1 கப்
செய்முறை:
* முதலில் நைலான் ஜவ்வரிசியை நீரில் அரை மணிநேரம் ஊற வைக்க
வேண்டும்.
* பின்னர் பாசிப்பருப்பை நீரில் 2 முறை கழுவி, குக்கரில் போட்டு
அடுப்பில் வைத்து, நல்ல மணம் வரும் வரை வறுக்க வேண்டும்.
* அதன் பின் அதில் ஊற ஜவ்வரிசியை நீரை வடிகட்டிவிட்டு சேர்த்து, பின்
அதில் 3 கப் நீரை ஊற்றி குக்கரை மூடி, 3 விசில் விட்டு இறக்க
வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் பொடித்த வெல்லத்தை சேர்த்து, அதில் 1 கப்
நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, வெல்லத்தை கரைத்து இறக்கிக் கொள்ள
வேண்டும்.
* குக்கர் விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் வெல்ல நீரை
வடிகட்டி சேர்த்து, அத்துடன் உப்பு, ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு
கிளறி விட வேண்டும்.
* பிறகு ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி
சூடானதும், முந்திரி, உலர் திராட்சை சேர்த்து தாளித்து, கொதித்துக்
கொண்டிருக்கும் பாயாசத்துடன் சேர்த்து கிளறி விட்டு இறக்கி குளிர
வைக்க வேண்டும்.
* பாயாசம் நன்கு குளிர்ந்த பின், தேவையான அளவு தேங்காய் பாலை ஊற்றி
கிளறினால், சுவையான ஜவ்வரிசி பாசிப்பருப்பு பாயாசம் தயார்.



Click it and Unblock the Notifications