Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
கோவில் வெண் பொங்கல் ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. நீங்களும் தெரிஞ்சுகிட்டு ட்ரை பண்ணுங்க..
Temple Ven Pongal Recipe In Tamil: பொங்கல் பண்டிகை வரப்போகிறது. இந்த பொங்கல் நாளில் உங்கள் வீட்டில் காலையில் சர்க்கரை பொங்கல் மட்டுமின்றி, வெண்பொங்கலும் செய்வீர்களா? அப்படி செய்யும் வெண்பொங்கல் அவ்வளவு ருசியாக இருக்காதா? ஏதாவது அதில் குறை இருக்குமா?
மேலும் எப்பவும் நீங்கள் செய்யும் வெண்பொங்கல் மீந்து போகுமா? அப்படியானால் கோவில் வெண்பொங்கலை செய்யுங்கள். இப்படி வெண்பொங்கலை செய்யும் போது, வீட்டில் உள்ளோர் அதன் மணத்தாலும், சுவையாலும் நொடியில் காலி செய்வார்கள்.

உங்களுக்கு கோவில் வெண் பொங்கலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கோவில் வெண் பொங்கல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மாவு பச்சரிசி - 3/4 கப்
* பாசிப்பருப்பு - 1/4 கப்
* தண்ணீர் - 3 1/2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* நெய் - 3 1/2 டேபிள் ஸ்பூன்
* மிளகு - 1 1/2 ஸ்பூன்
* சீரகம் - 1 ஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது)
* முந்திரி - 15
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3/4 கப்
பச்சரிசியையும், 1/4 கப் பாசிப்பருப்பையும் சேர்த்து நல்ல மணம் வரும்
வரை வறுத்து இறக்க வேண்டும்.
* பின்பு வறுத்த பொருட்களுடன் நீரை ஊற்றி 2 முறை கழுவிவிட்டு, பின்
குக்கரை கழுவிய அரிசி மற்றும் பருப்பை சேர்த்து, 3 1/2 கப் நீரை
ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து குக்கரை அடுப்பில் வைத்து மூடி, 6
விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, கரண்டியால் நன்கு கிளறி விட
வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும்,
மிளகு, சீரகம், பெருங்காயத் தூள் சேர்த்து நன்கு பொரிய விட
வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் இஞ்சியை
சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் முந்திரி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கி
இறக்கி, குக்கரில் உள்ள பொங்கலுடன் சேர்க்க வேண்டும்.
* பின் அந்த குக்கரை அடுப்பில் வைத்து, 5 நிமிடம் தாளிப்பு பொருட்கள்
பொங்கலுடன் ஒன்று சேர நன்கு கிளறி இறக்கினால், சுவையான கோவில்
வெண்பொங்கல் தயார்.



Click it and Unblock the Notifications