Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
வெறும் 3 பொருளை வெச்சு.. டீக்கடை இனிப்பு போண்டாவை செய்யலாம் தெரியுமா.. எப்படின்னு பாருங்க..
Tea Kadai Sweet Bonda Recipe In Tamil: பிள்ளைகளுக்கு லீவு விட்டாச்சு.. வீட்டிலேயே பிள்ளைகள் இருப்பதால் எப்போதும் ஏதாவது சாப்பிட கேட்டுக் கொண்டே இருப்பார்கள். இந்நிலையில் வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டு ஸ்நாக்ஸ் செய்ய தெரிந்து கொண்டால், அதிக செலவு செய்யாமல் வீட்டிலேயே ஸ்நாக்ஸ் செய்து கொடுக்கலாம்.
அதுவும் மாலை வேளையில் காபி, டீ குடிக்கும் போது பஜ்ஜி, போண்டா போன்று ஏதாவது சாப்பிட கேட்டால், வீட்டில் வாழைப்பழம் இருந்தால், அதைக் கொண்டு சூப்பரான டீக்கடை இனிப்பு போண்டாவை செய்து கொடுங்கள்.

இந்த இனிப்பு போண்டா செய்வதற்கு மிகவும் குறைவான பொருட்களே போதுமானது. அதே சமயம் இது செய்வதற்கு 10 நிமிடங்களே போதுமானது. முக்கியமாக இந்த போண்டா குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.
உங்களுக்கு டீக்கடை இனிப்பு போண்டாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே டீக்கடை இனிப்பு போண்டா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பெரிய வாழைப்பழம் - 1
* சர்க்கரை - 1/2 கப்
* ஏலக்காய் - 3
* கோதுமை மாவு - 1 கப்
* ரவை - 1 கப்
* தண்ணீர் - தேவையான அளவு
* பேக்கிங் சோடா - 1/4 டீஸ்பூன்
* உப்பு - 1 சிட்டிகை
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் நன்கு கனிந்த பெரிய வாழைப்பழத்தை வெட்டி
சேர்க்க வேண்டும்.
* பின் அதில் 1/2 கப் சர்க்கரையை சேர்த்து, அத்துடன் 3 ஏலக்காயை
சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் 1 கப் கோதுமை மாவு மற்றும் 1 கப் ரவை சேர்த்து, சிறிது
நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்ததை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* உடனே போண்டா சுடுவதாக இருந்தால், அதில் 1/4 டீஸ்பூன் பேக்கிங் சோடா,
1 சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு கலந்து, 5 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள
வேண்டும். ஒருவேளை உங்களுக்கு பேக்கிங் சோடா சேர்க்க
பிடிக்காவிட்டால், 5 மணிநேரம் மூடி வைத்து ஊற வைக்க வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், கலந்து வைத்துள்ள மாவை, கொஞ்சம்
கொஞ்சமா கிள்ளிப் போட்டு, மிதமான தீயில் வைத்து, பொன்னிறமாக பொரித்து
எடுத்தால், சுவையான இனிப்பு போண்டா தயார்.



Click it and Unblock the Notifications