Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
டீக்கடை ஸ்பெஷல் மசாலா போண்டா ரெசிபி... இந்த மாதிரி செஞ்சு பாருங்க... வீட்ல எல்லாரும் ஆசையா சாப்பிடுங்க...!
Tea Kadai Masala Bonda Recipe in Tamil: மாலை வேளையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு பசியுடன் வரும் உங்கள் குழந்தைகளுக்கு ஏதாவது வித்தியாசமாக செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? அதுவும் எளிதான மற்றும் சுவையான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க விரும்பினால், இந்த டீக்கடை உருளைக்கிழங்கு மசாலா போண்டா செய்து கொடுங்கள்.
இந்த டீக்கடை மசாலா போண்டா, வழக்கமான மசாலா போண்டாவை போன்றே சுவையாகவும், மென்மையாகவும் இருக்கும். ஆனால் இதன் சுவை கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். இந்த போண்டாவை ஒருமுறை செய்தால், உங்கள் வீட்டில் எல்லோரும் அடிக்கடி செய்து கொடுக்க கேட்பார்கள், அவ்வளவு சுவையாக இருக்கும்.

உங்களுக்கு சுவையான டீக்கடை மசாலா போண்டாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உருளைக்கிழங்கு மசாலா போண்டாவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- உருளைக்கிழங்கு - 1/4 கிலோ
- பச்சை பட்டாணி - அரை கப்
- வெங்காயம் - 1
- பச்சை மிளகாய் - 2
- மஞ்சள் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
- கரம் மசாலா தூள் - 1 ஸ்பூன்
- சோம்பு - 1/2 டேபிள் ஸ்பூன்
- கொத்தமல்லித் தழை - சிறிதளவு
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - தேவையான அளவு
மேல் மாவிற்கு தேவையானவை:
- கடலை மாவு - 1 கப்
- சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன்
- அரிசி மாவு - 1/2 கப்
- கேசரி பவுடர் - 2 சிட்டிகை
- உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- உருளைக்கிழங்கை நன்கு வேக வைத்து தோல் நீக்கி மசித்துக் கொள்ள வேண்டும்.
- பட்டாணியை வேகவைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் விட்டு அதில் சோம்பு, நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.
- வெங்காயம் நன்கு வதங்கியதும் அதனுடன் கரம் மசாலா தூள், உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து சிறிது வதக்கவும்.
- அதனுடன் நன்றாக மசித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கு மற்றும் பட்டாணியைச் சேர்த்து வதக்கி கொத்தமல்லித் தழைகளைத் தூவி இறக்கி ஆற வைக்க வேண்டும். இது நன்கு ஆறியதும் சின்ன சின்ன உருண்டைகளாக பிடித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
- ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, சோள மாவு, அரிசி மாவு, கேசரி பவுடர், தேவையான அளவு உப்பு சேர்த்து கரைத்துக்கொள்ளவும்.
- இது போண்டாவின் மேல் மாவிற்கான கலவை என்பதால் சிறிது கெட்டியாக இருப்பது அவசியம்.
- கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்த பின், தயார் செய்த உருண்டைகளை மேல் மாவில் முக்கி எடுத்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். சுவையான டீக்கடை உருளைக்கிழங்கு போண்டா தயார்.



Click it and Unblock the Notifications