Latest Updates
-
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
1 கப் அரிசியும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா.. ஈவ்னிங் மொறுமொறுன்னு இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க..
Kutty Bonda Recipe In Tamil: மாலை வேளையில் காபி, டீ குடிக்கும் போது பஜ்ஜி, போண்டா, வடை என்று சாப்பிடுவோம். ஆனால் உங்கள் வீட்டில் பஜ்ஜி போட கடலை மாவு இல்லையா? உங்கள் வீட்டில் அரிசியும், உருளைக்கிழங்கும் இருந்தால், அவற்றைக் கொண்டு டீக்கடை குட்டி போண்டா செய்து, அதற்கு சைடு டிஷ்ஷாக தேங்காய் சட்னியை செய்யுங்கள்.
இது செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, சுவையாகவும் இருக்கும். அதுவும் ஒருமுறை இந்த போண்டாவை செய்து கொடுங்கள், பின் பாருங்கள் அடிக்கடி செய்து கொடுக்குமாறு சொல்வார்கள்.

உங்களுக்கு இந்த டீக்கடை குட்டி போண்டாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே குட்டி போண்டா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* புழுங்கல் அரிசி - 1 கப்
* வேக வைத்த உருளைக்கிழங்கு - 2
* தண்ணீர் - தேவையான அளவு
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
சட்னிக்கு...
* தேங்காய் - 1/4 மூடி
* பச்சை மிளகாய் - 2
* இஞ்சி - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
* புளி - சிறிய துண்டு
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் புழுங்கல் அரிசியை நீரில் 2 முறை கழுவிவிட்டு, பின்
அரிசி மூழ்கும் அளவில் சுத்தமான நீரை ஊற்றி, 2 மணிநேரம் ஊற வைக்க
வேண்டும்.
* 2 மணிநேரம் கழித்து, நீரை வடிகட்டிவிட்டு, மிக்சர் ஜாரில் போட்டு,
அத்துடன் வேக வைத்து தோலுரித்த உருளைக்கிழங்கை துண்டுகளாக்கி
சேர்த்து, கொஞ்சம் கொஞ்சமாக நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் அரைத்ததை போட்டு, அத்துடன் பொடியாக
நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலை,
சீரகம் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கைகளால் நன்கு பிசைந்து
விட வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பிசைந்த மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து
எண்ணெயில் கிள்ளிப் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான
டீக்கடை குட்டி போண்டா தயார்.
* பிறகு மிக்சர் ஜாரில் நறுக்கிய தேங்காய், பச்சை மிளகாய், இஞ்சி,
கொத்தமல்லி, புளி மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சிறிது நீரை
ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, தேவையான
அளவு நீரை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை மற்றும்
சீரகம் சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கலந்தால், சட்னி
தயார்.



Click it and Unblock the Notifications











