Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
நாவூறும்... ருசியான... தந்தூரி சிக்கனை வீட்டிலேயே ஈஸியா எப்படி செய்யணும் தெரியுமா?
Tandoori Chicken Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோர் தந்தூரி சிக்கனை விரும்பி சாப்பிடுவார்களா? அந்த தந்தூரி சிக்கனை எப்போதும் கடைகளில் தான் வாங்கி சாப்பிடுவீர்களா? ஆனால் கடைகளில் வாங்கி கட்டுபடியாகலையா? அப்படியானால் அதை வீட்டிலேயே செய்து சாப்பிடுங்கள்.
பொதுவாக கடைகளில் தந்தூரி சிக்கனை கம்பியில் சொருகி நெருப்பில் சுட்டு எடுப்பார்கள். ஆனால் வீட்டில் செய்வதாக இருந்தால், அப்படியெல்லாம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. மசாலாக்களை சரியான பக்குவத்தில் எடுத்து கலந்து, சிக்கனுடன் பிசைந்து நன்கு ஊற வைத்து, பின் தந்தூரி ப்ளேவருக்கு கடைசியில் ஒருசின்ன ட்ரிக்ஸை செய்தால், தந்தூரி சிக்கனின் சுவை வந்துவிடும்.

உங்களுக்கு தந்தூரி சிக்கனை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தந்தூரி சிக்கன் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சிக்கன் - 1 கிலோ
* கெட்டி தயிர் - 100 மிலி
* எலுமிச்சை - 1
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
* உப்பு - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* கசூரி மெத்தி - 1 டீஸ்பூன்
* சிவப்பு நிற கேசரி பவுடர் - 1/2 டீஸ்பூன்
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
* கறிக்கட்டை
* நெய் - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் தந்தூரி சிக்கன் செய்வதற்கு 1 கிலோ உள்ள 4 பெரிய சிக்கன்
துண்டுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் கெட்டித் தயிர், 1 எலுமிச்சையின் சாறு,
இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு, மல்லித் தூள், சீரகத் தூள், கரம் மசாலா,
மஞ்சள் தூள், மிளகாய் தூள், கசூரி மெத்தி சேர்த்து நன்கு கலந்து கொள்ள
வேண்டும்.
* பின் அதில் சிவப்பு நிற கேசரி பவுடர் சேர்த்து நன்கு கட்டிகளின்றி
கலந்து கொள்ள வேண்டும்.
* அதன் பின் ஒவ்வொரு சிக்கன் துண்டுகளையும் எடுத்து, மசாலா உள்ளே
இறங்குவதற்கு கத்தியால் அவற்றை நன்கு கீறி விட வேண்டும்.
* பிறகு அந்த சிக்கனில் மசாலா தடவி ஒரு தட்டில் வைத்துக் கொள்ள
வேண்டும்.
* இதேப் போன்று அனைத்து மசாலாவையும் சிக்கனில் தடவிக் கொள்ள வேண்டும்.
பின் அந்த சிக்கனை ஃப்ரிட்ஜ்ஜில் குறைந்தது 6 மணிநேரம் ஊற வைக்க
வேண்டும்.
* 6 மணிநேரம் கழித்து சிக்கனை வெளியே எடுத்து விட வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு எண்ணெய்
ஊற்றி சூடானதும், இந்த சிக்கன் துண்டுகளைப் போட்டு 15 நிமிடம்
முன்னும் பின்னும் திருப்பிப் போட்டு வேக வைத்து எடுக்க வேண்டும்.
* இறுதியாக ப்ரை செய்த சிக்கன் துண்டுகளை ஒரு வாணலியில் வைத்து, நடுவே
ஒரு சிறிய கிண்ணத்தை வைக்க வேண்டும்.
* பின் கறிக்கட்டையை எடுத்து, நெருப்பில் பொன்னிறமாக சுட்டு, சிக்கன்
நடுவே உள்ள கிண்ணத்தில் வைத்து, மேலே 1 டீஸ்பூன் நெய் ஊற்றி, வாணலியை
10 நிமிடம் மூடி வைத்து, பின் பரிமாறினால், சுவையான தந்தூரி சிக்கன்
தயார்.



Click it and Unblock the Notifications