Latest Updates
-
சனிபகவான் ரேவதி நட்சத்திரத்திற்கு செல்வதால் துரதிர்ஷ்டத்தையும், ஆபத்துகளையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் -
சௌ சௌ வாங்குனா இந்த மாதிரி வித்தியாசமா சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
ஹன்டா வைரஸ் Vs. கொரோனா வைரஸ்: இந்த இரண்டில் எது மிகவும் ஆபத்தானது? அவற்றின் அறிகுறிகள் என்னென்ன தெரியுமா? -
விஜய் சிஎம் ஆனதும் த்ரிஷா போட்ட அந்த ஒரு பதிவு... பின்னணியில் இருக்கும் மர்மம் என்ன? -
கல்யாண மேடையில் ரத்தக் களரி! வரதட்சணை கேட்டு மணமகன் வீட்டார் செய்த அராஜகம் - அதிர்ச்சியில் உறைந்த விருந்தினர்கள்! -
கிராமத்து ஸ்டைல் சிக்கன் பிரட்டல் ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க, செம சைடிஷா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்கள் உலகை ஆட்டிப்படைக்கும் சக்திவாய்ந்தவர்களாக இருப்பார்களாம் -
கிலோ 12000 ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான அரிசி இதுதான் - இதுல அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா? -
வீட்டின் வாஸ்துவை மாற்றும் ரகசியம்! மழைக்காலத்தில் இந்த செடிகள் இருந்தால் அதிர்ஷ்டம் தேடி வரும் -
ஐயங்கார் ஸ்டைல் மிளகு குழம்பு ரெசிபி - ஒருதடவை ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமா இருக்கும்
பொரிகடலை உருண்டை செய்யறது இவ்வளவு ஈஸியா?

தம்புட்டு ரெசிபி ஒரு கர்நாடக ஸ்டைல் ரெசிபி. அப்படியே மெதுவான பந்து போல வறுத்த பொரி கடலை பருப்பால் செய்து அதன் மேல் அப்படியே வெல்ல பாகுவால் நனைத்து நெய் சொட்ட சொட்ட நறுமணம் மிக்க ஏலக்காய் சுவையுடன் ஒரு கடி கடிக்கும் போதே நம் நாவில் எச்சி ஊறி விடும். இந்த தம்புட்டு ரெசிபியை வீட்டில் எளிதாக செய்வதோடு கலோரி குறைந்தது என்பதால் உங்கள் டயட்டில் கூட சேர்த்து கொள்ளலாம்.இதை எப்படி செய்வது என்பதை செய்முறை விளக்கத்துடன் பார்க்கலாம்.

Recipe By: காவ்யா
Recipe Type: டெசர்ட்
Serves: 5-6
-
அரிசி மாவு - 1/2 கப்
பொரிகடலை - 1/2 கப்
உலர்ந்த தேங்காய் துருவல் - 1/2 கப்
நிலக்கடலை - 1/2 கப்
வெல்லம் - 3/4 கப்
உலர்ந்த பழங்கள் (முந்திரி +உலர்ந்த திராட்சை பழங்கள்) - 8-10 (உடைத்தது)
நெய் - 1/2 கப்
தண்ணீர் - 1/4 கப்
ஏலக்காய் - 4
-
1.ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் நெய் ஊற்ற வேண்டும்
2. அதில் முந்திரி பருப்பு மற்றும் உலர்ந்த திராட்சை பழங்கள் சேர்த்து
பொன்னிறமாக வறுக்க வேண்டும். அதை தனியாக எடுத்து வைக்கவும்
3. இப்பொழுது அதே கடாயில் பொரி கடலை, நிலக்கடலை மற்றும் துருவிய தேங்காய் சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும்.
4.1-2 நிமிடங்கள் வரை வறுத்து ஒரு மிக்ஸி சாரில் தட்ட வேண்டும்.
5. இப்பொழுது எல்லாவற்றையும் கரகரப்பாக அரைத்து கொள்ளவும்
6. அடுப்பில் மற்றொரு கடாயை வைத்து அதில் வெல்லம், தண்ணீர் சேர்த்து சூடுபடுத்த வேண்டும்.
7. வெல்லம் முழுவதுமாக கரைந்து கொஞ்சம் கெட்டியான பதம் வரும் வரை சூடுபடுத்தவும்.
8. இப்பொழுது அரைத்த கடலை கலவை, நெய் ,அரிசி மாவு போன்றவற்றை வெல்லத்துடன் சேர்த்து கிளற வேண்டும்.
9. வறுத்த உலர்ந்த பழங்களையும் சேர்த்து நன்றாக கிளறவும்.
10.இதை தட்டில் தட்டி சில நிமிடங்கள் ஆற விடவும்
11. பிறகு பந்து அல்லது உங்களுக்கு விருப்பமான வடிவத்தில் உருட்டி ஒரு தட்டில்
வைத்து பரிமாறவும்.
- 1.அதிகமாக அரிசி மாவு பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் லட்டு உலர்ந்து போய் சீக்கிரம் உடைந்துவிடும். பிடிக்கவும் வசதியாக இருக்காது
- 2.நிலக்கடலையை அதிக நேரம் வறுக்க வேண்டாம். ஏனெனில் கருகி போகி அதன் சுவை மாறிவிடும்.
- பரிமாறும் அளவு - 1 லட்டு
- கலோரிகள் - 102
- கொழுப்பு - 5.8 கிராம்
- புரோட்டீன் - 1.9 கிராம்
- கார்போஹைட்ரேட் - 10.6 கிராம்
- நார்ச்சத்து - 0.5 கிராம்
படத்துடன் செய்முறை விளக்கம் :தம்புட்டு(பொரிகடலை உருண்டை) செய்வது எப்படி
1.ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் நெய் ஊற்ற வேண்டும்
2. அதில் முந்திரி பருப்பு மற்றும் உலர்ந்த திராட்சை பழங்கள் சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும். அதை தனியாக எடுத்து வைக்கவும்.
3. இப்பொழுது அதே கடாயில் பொரி கடலை, நிலக்கடலை மற்றும் துருவிய தேங்காய் சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும்.
4.1-2 நிமிடங்கள் வரை வறுத்து ஒரு மிக்ஸி சாரில் தட்ட வேண்டும்.
5. இப்பொழுது எல்லாவற்றையும் கரகரப்பாக அரைத்து கொள்ளவும்
6. அடுப்பில் மற்றொரு கடாயை வைத்து அதில் வெல்லம், தண்ணீர் சேர்த்து சூடுபடுத்த வேண்டும்.
7. வெல்லம் முழுவதுமாக கரைந்து கொஞ்சம் கெட்டியான பதம் வரும் வரை சூடுபடுத்தவும்.
8. இப்பொழுது அரைத்த கடலை கலவை, நெய் ,அரிசி மாவு போன்றவற்றை வெல்லத்துடன் சேர்த்து கிளற வேண்டும்.
9. வறுத்த உலர்ந்த பழங்களையும் சேர்த்து நன்றாக கிளறவும்.
10.இதை தட்டில் தட்டி சில நிமிடங்கள் ஆற விடவும்.
11. பிறகு பந்து அல்லது உங்களுக்கு விருப்பமான வடிவத்தில் உருட்டி ஒரு தட்டில் வைத்து பரிமாறவும்.



Click it and Unblock the Notifications






































