தீபாவளி இனிப்பு ஸக்கார் பரே - செய்முறை !

Posted By: Staff
Subscribe to Boldsky

தீபங்களின் பண்டிகையான தீபாவளி நெருங்கி வருகின்றது. தீபாவளிக்கு தேவையான துணிவகைகள் மற்றும் பட்டாசு வகைகளை வாங்கி வைத்திருப்போம் எனினும் தீபாவளிக்கான இனிப்புகளை வீட்டீலேயே தயாரித்து நம் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு பரிமாறும் சுகமே அலாதியானது. கடைகளில் விதம் விதமாக இனிப்பு வகைகள் இருந்தாலும், நம் கையால் ஒரு சிறந்த இனிப்பை தயாரித்து அதை அன்புடன் பரிமாறும் சுமமே சுகம். இனிப்பு என்றவுடன் காஜூ கத்ளி, லட்டு போன்ற கடினமான இனிப்பு வகைகளை நினைத்துக் கொள்கின்றீர்களா. மிகவும் எளிமையான இனிப்பை தயாரித்து இந்த தீபாவளியை இனிமையாக்குங்கள்.

Shakkar Pare Sweet Recipe For Diwali!

நாம் இங்கே ஸக்கார் பரே என்கின்ற மிகவும் எளிமையான மற்றும் அற்புதமான இனிப்பின் செய்முறையை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். இதைப் படித்து மற்றும் செய்த்து பார்த்து இந்த தீபாவளியை மறக்க முடியாத தீபாவளியாக மாற்றுங்கள்.

இங்கே நாம் இனிப்பை தயாரிக்க தேவையான பொருட்கள் மற்றும் அதன் செயல்முறைக் குறிப்புகளை தந்துள்ளோம். எனவே அதைப் பற்றி தெரிந்து கொள்ள மேலே தொடர்ந்து படியுங்கள்.

பரிமாறும் அளவு - 4 பேர்

தயாரிப்பு நேரம் - 30 நிமிடங்கள்

சமைக்கும் நேரம் - 50 நிமிடங்கள்

தேவையான பொருட்கள்:

ஸக்கார் பரே க்கு தேவையானவை

1. முழு கோதுமை மாவு - 2 கப்

2. நெய் - 2 டீஸ்பூன்

3. தண்ணீர் - தேவைப்படும் அளவு

4. ரவை - கால் கப்

5. எண்ணைய் - பொறித்தெடுக்கத் தேவையான அளவு

சர்க்கரைப் பாகு க்கு தேவையானவை

1. தூளாக்கிய சர்க்கரை - 1 கப்

2. தண்ணீர் - அரை கப்

3. குங்குமப்பூ - சில இதழ்கள் (நீங்கள் விரும்பினால்)

செயல்முறை:

ஸ்க்கார் பரே

1. ஒரு கிண்ணத்தில் மாவு எடுத்து அதனுடன் ரவை, நெய் மற்றும் சர்க்கரையை சேர்க்கவும். இந்த நான்கு பொருட்களின் கலவையை நன்கு கலக்கவும்.

2. இப்போது, தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். மாவு மென்மையாக மற்றும் திரண்டு வரும் வரை அதை நன்கு பிசையவும் .

3. மாவை இரண்டு சம பகுதிகளாக பிரித்து அதை ஒரு சுத்தமான பருத்தி துணி கொண்டு மூடி வைக்கவும்.

4. ஒரு சில நிமிடங்களுக்கு பிறகு, மாவை பந்து போல் உருட்டி எடுத்து அதை சப்பாத்திக் கல்லில் வைத்து ஒரு தடித்த பராத்தா பதத்திற்கு தேய்க்கவும்.

5. இப்போது, தேய்த்த மாவை கிடைமட்டமாக மற்றும் செங்குத்தாக வைர வடிவில் வெட்டி துண்டுகளாக மாற்றவும்.

6. ஒரு கடாயில் பொறித்து எடுக்கத் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதைச் சூடாக்கவும்.

7. எண்ணெய் சூடான பின்னர் அதில் வெட்டி வைத்த துண்டுகளைச் சேர்த்து துண்டுகள் பொன்னிறமாக வரும் வரை பொறித்து எடுக்கவும். துண்டுகள் பொறியும் பொழுது தீயை மிதமாக மாற்றவும்.

8. கடாயில் அனைத்துத் துண்டங்களையும் போட வேண்டாம். கடாயில் துண்டங்கள் பொறிவதற்கு தேவையான இடைவெளி இருப்பது மிகவும் அவசியம்.

9. ஸ்க்கார் பரே பொன்னிறமாக வரும் வரை பொறிய விடவும். அதன் பிறகு ஸ்க்கார் பரேவை கடாயில் இருந்து எடுத்து அதிகம் உள்ள எண்ணெயை வடிய விடவும்.

சர்க்கரை பாகு

1. ஒரு கடாயில் சர்க்கரையை எடுத்து அதனுடன் தண்ணீர் சேர்க்கவும்.

2. நடுத்தர வெப்ப நிலையில் தீச் சுடரை குறைந்து, சக்கரையானது தண்ணீரில் நன்கு கரையும் வரை கலக்கவும்.

3. கொப்புளம் மற்றும் ஒட்டும் பதம் வரும் வரை கலவையை கலக்கவும். அதன் பின்னர் பாகில் குங்குமப்பூ சேர்க்கவும்.

4. பாகை கையில் எடுத்து பார்க்கும் பொழுது இரண்டு அல்லது மூன்று கம்பிகள் வரும் வரை தொடர்ந்து அடுப்பில் வைத்துக் கிளறவும்.

5. இறுதியாக, ஸக்கார் பரேயின் மீது பாகை கொட்டி அதை பரவ விடவும். ஸக்கார் பரே குளிரும் வரை அப்படியே விட்டு விடவும்.

இப்பொழுது உங்களின் ஸக்கார் பரே பறிமார தயாராக உள்ளது.

(குறிப்பு: நீங்கள், ஸக்கார் பரே மீது சூடான சர்க்கரை பாகை ஊற்ற வேண்டும், இல்லையெனில் பாகு கெட்டியாகி விடும்.)

English summary

Shakkar Pare Sweet Recipe For Diwali!

Shakkar Pare Sweet Recipe For Diwali!
Story first published: Friday, October 21, 2016, 19:30 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter