For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அன்னாசிப் பழ சாண்ட்விச்

By Maha
|

விடுமுறை நாட்களில் காலையில் எழுந்ததும் சமையல் செய்ய வேண்டுமென்றால், ஒருவித கடுப்பு ஏற்படும். அதிலும் என்ன சமையல் செய்வதென்று தெரியாமல் இருந்தால், அதை விட கோபம் தான் வரும். ஆகவே இந்த நிலையில் இருக்கும் போது, வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் ஒரு ஈஸியான, வித்தியாசமான மற்றும் ஆரோக்கியமான ரெசிபியை செய்யலாம். குறிப்பாக இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

அதிலும் அன்னாசிப் பழத்தைக் கொண்டு சூப்பரான சுவையில் சாண்ட்விச் செய்யலாம். இப்போது அந்த அன்னாசிப் பழ சாண்ட்விச் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Pineapple Sandwich

தேவையான பொருட்கள்:

அன்னாசி - 2 கப் (நறுக்கியது)
காட்டேஜ் சீஸ் - 1 கப் (துருவியது)
ப்ரஷ் க்ரீம் - 2 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை - 4 டேபிள் ஸ்பூன்
கோதுமை பிரட் - 6
எள் - 1/2 கப் (வறுத்தது)

செய்முறை:

முதலில் மிக்ஸியில் அன்னாசி, ப்ரஷ் க்ரீம் மற்றும் சர்க்கரை போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு பிரட் துண்டை எடுத்துக் கொண்டு, அரைத்து வைத்திருக்கும் அன்னாசி கலவையை சிறிது வைத்து, அதன் மேல் சிறிது காட்டேஜ் சீஸ் தூவி, பின் அதன் மேல் எள்ளை தூவ வேண்டும்.

அடுத்து அதன் மேல் மற்றொரு பிரட் துண்டை வைத்து, பிறகு கத்தியைக் கொண்டு நறுக்கி விட வேண்டும். இதேப் போல் அனைத்து பிரட் துண்டுகளையும் செய்ய வேண்டும்.

இப்போது சூப்பரான அன்னாசிப் பழ சாண்ட்விச் ரெடி!!!

English summary

Pineapple Sandwich

On weekends, most parents want to try out something different and easy to prepare for their little ones. Therefore, this pineapple sandwich recipe is apt for a nice breakfast. Keep in mind that when you make this pineapple sandwich, try to use only whole grain bread as it is much healthier that normal wheat bread. Take a look at this tangy pineapple sandwich recipe.
Story first published: Saturday, August 24, 2013, 10:02 [IST]
Desktop Bottom Promotion