For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்: தித்திக்கும்... மிஸ்டி தோய் ரெசிபி!!!

By Maha
|

இந்தியாவிலேயே வட இந்தியாவில் மிகவும் கலக்கலாக கொண்டாடப்படும் விழா தான் கிருஷ்ண ஜெயந்தி. அங்கு கிருஷ்ணனுக்கு பிடித்தவாறு பல இனிப்புப் பண்டங்களை செய்வார்கள். அவை அனைத்தும் மிகவும் சுவையானதாக இருக்கும். அதிலும் பெங்காலி ரெசிபிக்கள் என்றால் சொல்லவே வேண்டாம்.

அந்த வகையில் பெங்காலியில் கிருஷ்ண ஜெயந்திக்கு செய்யப்படும் ஒரு இனிப்பான ரெசிபி தான் மிஸ்டி தோய். இப்போது அந்த ரெசிபியைப் பார்ப்போமா!!!

Krishna Jayanthi Special: Misti Doi Recipe

தேவையான பொருட்கள்:

பால் - 1 லிட்டர்
தயிர் - 3-4 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை - 250 கிராம்

செய்முறை:

முதலில் பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து, தீயை குறைவில் வைத்து, பாதியாக சுண்ட வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் அதனை இறக்கி குளிர வைக்க வேண்டும்.

மற்றொரு பாத்திரத்தில் தயிர் மற்றும் சர்க்கரையைப் போட்டு, உருக வைக்க வேண்டும். எப்போது சர்க்கரையானது உருகிவிட்டதோ, அப்போது பாலை அத்துடன் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

பிறகு அதனை ஓரளவு சுண்ட விட்டு, ஒரு பானையில் ஊற்றி, சுத்தமான துணியால் மூடி, தனியாக 3-4 மணிநேரம் வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு அதனை எடுத்து சாப்பிட்டால், இனிப்பான மிஸ்டி தோய் ரெசிபி ரெடி!!!

English summary

Krishna Jayanthi Special: Misti Doi Recipe

This is Bengali milk sweet which is prepared on the festival of krishna jayanthi/Janmasthami. This sweet yogurt is a must try recipe for you to prepare in order to celebrate the birthday of Krishna.
Story first published: Wednesday, August 28, 2013, 18:26 [IST]
Desktop Bottom Promotion