Just In
- 1 hr ago Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- 6 hrs ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- 8 hrs ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- 9 hrs ago திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
Don't Miss
- Automobiles இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
- News இதுதான் நம்ம தமிழ்நாடு.. மூக்கு மேல் விரல் வைத்த ஈரோடு.. புது டிரஸ்ஸில்.. யாரிந்த 3 பெண்கள்.. சபாஷ்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ஜெல்லி கேக்
உங்களுக்கு சமையல் மீது அலாதி விருப்பமா? அதிலும் வித்தியாசமாக சமைக்க முயற்சிப்பவரா? அப்படியெனில் இந்த விடுமுறை நாட்களில் ஓர் அற்புதமான ஜெல்லி கேக்கை வீட்டிலேயே முயற்சி செய்து பாருங்கள். இது செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருப்பதோடு, வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.
சரி, இப்போது அந்த ஜெல்லி கேக்கின் எளிய செய்முறையைப் பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
மைதா
-
1
1/4
கப்
பேக்கிங்
பவுடர்
-
1
1/4
டீஸ்பூன்
உப்பு
-
1
சிட்டிகை
சர்க்கரை
-
1/2
கப்
வெண்ணெய்
-
125
கிராம்
வென்னிலா
எசன்ஸ்
-
2
டீஸ்பூன்
பால்
-
1/2
கப்
முட்டை
-
1
டாப்பிங்கிற்கு...
ஜெல்லி
பாக்கெட்
-
1
தண்ணீர்
-
450
மிலி
தேங்காய்
பொடி
-
2
கப்
செய்முறை:
முதலில் ஜெல்லி பாக்கெட்டில் கொடுக்கப்பட்டுள்ளவாறு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி, நன்கு கொதிக்கவிட வேண்டும். பின் ஒரு பௌலில் ஜெல்லி பொடியைப் போட்டுக் கொள்ளவும்.
பின்னர் அதில் அந்த சுடுநீரை ஊற்றி நன்கு கிளறி, ஃப்ரிட்ஜினுள் வைத்து குளிர வைக்கவும். முக்கியமாக ஜெல்லி கெட்டியாகாமல் நீர்ம நிலையில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
பின் மைக்ரோ ஓவனை 180 டிகிரியில் சூடேற்றிக் கொள்ளவும. பின் நான்-ஸ்டிக் மஃபின் பேனில் (nonstick muffin pan) எண்ணெயை தடவிக் கொள்ளவும்.
பின்பு ஒரு பௌலில் மைதா, பேக்கிங் பவுடர், உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். பிறகு மற்றொரு பௌலில் வெண்ணெய் போட்டு, அத்துடன் வென்னிலா எசன்ஸ், சர்க்கரை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும்.
பின் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ளவும். அடுத்து, மைதா கலவையை மூன்றாக பிரித்து, ஒரு பகுதியை வெண்ணெய் கலவையுடன் சேர்த்து கிளறி, சிறிது பால் ஊற்றி நன்கு கிளறவும்.
பின்னர் மற்றொரு மைதா பகுதியை சேர்த்து கிளறி, மீண்டும் சிறிது பால் ஊற்றி கிளறவும். அடுத்து மீதமுள்ள மைதாவை சேர்த்து கிளறி, எஞ்சிய பாலையும் ஊற்றி நன்கு கட்டிகள் சேராதவாறு கிளறி விடவும்.
இறுதியில் அந்த மஃபின் பேனில் ஒரு டேபிள் ஸ்பூன்களால் இந்த கலவையை வைத்து, மைக்ரோ ஓவனில் வைத்து 15/20 நிமிடம் பேக் செய்து இறக்கி, தட்டில் தனியாக வைத்துக் கொள்ளவும்.
பின்பு அந்த மஃபினை ஜெல்லி நீரில் மூழ்கி எடுத்து, தேங்காய் பொடியில் பிரட்டி எடுக்கவும். இதேப் போன்று அனைத்தையும் செய்தால், ஜெல்லி கேக் ரெடி!!!
Image Courtesy: yummytummyaarthi