Just In
- 3 hrs ago
இன்னைக்கு இந்த ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பூகம்பமே வரப்போகுதாம் உஷாரா இருங்க...!
- 15 hrs ago
நீங்கள் செய்யும் இந்த செயல்கள் சனிபகவானின் கோபத்தை அதிகரிக்கும் தெரியுமா?
- 17 hrs ago
ஆண்குறி வடிவில் பீச்சில் கரை ஒதுங்கிய அரிய வகை மீன்கள்… எங்கு தெரியுமா?
- 17 hrs ago
போரடிக்கிற செக்ஸ் வாழ்க்கையை மீண்டும் சூப்பராக மாத்துறது எப்படினு தெரியுமா?
Don't Miss
- News
நித்யானந்தா 'அந்த விஷயத்தில்' வெறியர்.. சென்னை போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் சீடர் பாலியல் புகார்
- Movies
தபாங் 3... இவர் வாய்ஸில்தான் தமிழ் பேசுகிறார் சோனாக்ஷி
- Technology
காதலிக்காக எலோன் மஸ்க் கொடுத்த இன்ப அதிர்ச்சி என்னவென்று தெரியுமா?
- Automobiles
இன்று முதல் அனைத்து வாகனங்களுக்கும் கட்டாயம்... பாஸ்ட்டேக் இல்லாவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?
- Finance
அமூல் பால் விலை ஏற்றம்..!
- Sports
பலமான பெங்களூரு அணியை எதிர்கொள்ளும் மும்பை அணி.. களத்தில் காத்திருக்கும் போர்!
- Education
DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்! ஊதியம் ரூ.56 ஆயிரம்!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
எக்லெஸ் கேரட் கேக்
கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அனைவருக்கு இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையன்று ஸ்பெஷலாக வீட்டில் என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருப்பார்கள். நீங்கள் அப்படி யோசிக்கிறீர்கள் என்றால், கடைகளில் கேக் வாங்குவதற்கு பதிலாக வீட்டிலேயே செய்யுங்கள். அதுவும் வித்தியமாசமான கேரட் கேட் செய்யுங்கள்.
இது உண்மையில் வீட்டிற்கு வந்த விருந்தினர்களுக்கு நல்ல விருந்தளிப்பது போன்று இருக்கும். சரி, இப்போது எக்லெஸ் கேரட் கேக்கை எப்படி எளிமையாக செய்வதென்று பார்ப்போமா!
தேவையான பொருட்கள்:
மைதா - 3/4 கப்
கோதுமை மாவு - 1/4 கப்
துருவிய கேரட் - 1/2 கப்
தயிர் - 3/4 கப்
ஆலிவ் ஆயில் - 1/4 கப்
பால் - 2 1/2 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை - 1/2 கப்
வென்னிலா எசன்ஸ் - 1/2 டீஸ்பூன்
ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்
பேப்பிங் பவுடர் - 1/2 டீஸ்பூன்
பேக்கிங் சோடா - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1/4 டீஸ்பூன்
வால்நட்ஸ் - ஒரு கையளவு
செய்முறை:
முதலில் மைதா, கோதுமை, பேக்கிங் பவுடர் மற்றும் பேக்கிங் சோடாவை ஒன்றாக கலந்து, சல்லடைக் கொண்டு சலித்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு பௌலில் தயிர், பால், சர்க்கரை மற்றும் ஆலிவ் ஆயில் சேர்த்து நன்கு சர்க்கரை கரையும் வரை கிளறி விட வேண்டும்.
பின்பு அதில் ஏலக்காய் பொடி, வென்னிலா எசன்ஸ் சேர்த்து நன்கு கிளறி, பின் அதில் துருவிய கேரட், சலித்து வைத்துள்ள மாவை சேர்த்து, வால்நட்ஸை பொடியாக வெட்டிப் போட்டு, கட்டி சேராதவாறு நன்கு கிளறி விட வேண்டும்.
பின்னர் மைக்ரோ ஓவனை 182 டிகிரியில் 10 நிமிடம் சூடேற்ற வேண்டும். அதற்குள் பேக்கிங் ட்ரேயில் பட்டர் பேப்பரை விரித்து, அதன் மேல் வெண்ணெயை தடவி, மைதாவை சிறிது தூவி, பின் அதில் கேக் கலவையை ஊற்றி, மைக்ரோ ஓவனில் வைத்து 20-25 நிமிடம் பேக் செய்ய வேண்டும்.
அடுத்து கேக் நன்கு வெந்துவிட்டதா என்று டூத்பிக் கொண்டு குத்திப் பார்க்கும் போது, டூத்பிக்கில் மாவு ஒட்டினால், மீண்டும் ஓவனில் வைத்து 5-10 நிமிடம் பேக் செய்து இறக்க வேண்டும்.
இறுதியில் ஓவனில் இருந்து எடுத்த உடனேயே ஒரு ஈரமான துணியில் அதனை 15 நிமிடம் வைத்து, பின் அதனை ஒரு தட்டில் குப்புற தட்டி, அதன் மேல் உள்ள பட்டர் பேப்பரை எடுத்து, 1 மணிநேரம் கழித்து, கத்தியால் துண்டுகளாக்கினால், எக்லெஸ் கேரட் கேக் ரெடி!!!
Image Courtesy: sharmispassions