தீபாவளிக்கான சாக்லேட் பர்பி - செய்முறை!

By: Badri
Subscribe to Boldsky

உங்களின் தீபாவளி கொண்டாட்டம் இனிப்பின்றி முழுமை அடையாது. இந்த தீபாவளிக்கு சின்ன பூந்தி லட்டு, பெரிய பூந்தி லட்டு, மற்றும் காஜூ கத்ளி போன்ற இனிப்பு வகைகள் செய்ய திட்டமிட்டு உள்ளீர்களா? இவை அனைத்தும் எல்லாருடைய வீட்டிலும் செய்யப்படும் இனிப்பு பதார்த்தங்களாகும்.

உங்களின் தீபாவளி கொண்டாட்டம் பிரத்தியேகமாகவும் மற்றும் சிறப்பு வாய்ந்ததாகவும் இருக்க வேண்டாமா? வித்தியாசமாக ஒரு இனிப்பை இந்த தீபாவளிக்கு முயற்சி செய்து பாக்கலாமா. குறிப்பாக குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சாக்லேட்டை வைத்து ஒரு புதிய இனிப்பை இந்த தீபாவளிக்கு முயற்சி செய்யலாம்.

Diwali Special: Chocolate Barfi Recipe

வழக்கமாக நீங்கள் முயற்சி செய்து பார்க்கும் லட்டு, மற்றும் பர்பிக்களை தவிர்த்து புதிதாக சாக்லேட் பர்பியின் செயல்முறையை நாங்கள் உங்களுக்காக வழங்குகின்றோம். இது கண்டிப்பாக உங்கள் உறவினர், மற்றும் குழந்தைகளுக்கு பிடிக்கும்.

கீழே தெரிவிக்கப்பட்டுள்ள செய்முறை குறிப்புகளைப் பயன்படுத்தி சாக்லேட் பர்பி செய்து பார்த்து தீபாவளியை இன்னும் இனிப்பாக கொண்டாடுங்கள்.

பறிமாறும் அளவு - 4 பேர்

தயாரிப்பு நேரம் - 10 நிமிடங்கள்

சமையல் நேரம் - 30 நிமிடங்கள்

தேவையான பொருட்கள்:

1. உருகிய உப்பு சேர்க்காத வெண்ணெய் - 55 கிராம்

2. தூளாக்கிய சர்க்கரை - 25 கிராம்

3. நொறுக்கப்பட்ட பிஸ்கட் - 15

4. உப்பு - ஒரு சிட்டிகை

5. கன்டென்ஸ்ட் மில்க் - 125 மில்லி

6. தேங்காய் - 40 கிராம்

7. சாக்லேட் சிப்ஸ் - 125 கிராம்

8. மிக்ஸ்டு நட்ஸ் - 50 கிராம் (நறுக்கியது)

செயல்முறை:

1. பர்பி செயல்முறை தொடங்குவதற்கு முன், ஒரு கிண்ணத்தில் முற்றிலும் நொறுக்கப்பட்ட பிஸ்கட், தூளாக்கிய சர்க்கரை மற்றும் உப்பு ஆகியவற்றை எடுத்து நன்கு கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். அதை ஒரு ஓரமாக ஒதுக்கி வைத்து விடுங்கள்.

2. நீங்கள் பொருட்களை கலக்கும் போது ஓவனை 180 டிகிரி செல்சியஸ் அளவிற்கு சூடாக்க மறக்க வேண்டாம்.

3. இப்போது, ஒரு பெரிய கிண்ணத்தை எடுத்து அதில் உருகிய வெண்ணெயை சேர்க்க வேண்டும்.

4. தற்பொழுது நொறுங்கிய பிஸ்கட் கலவையை உருகிய வெண்ணெய் உடன் சேர்த்து அந்த கலவையை நன்கு கலக்கவும்.

5. ஒரு பேக்கிங் தட்டை எடுத்து அதில் அந்த கலவையை ஊற்றவும். நீங்கள் பேக்கிங் தட்டில் கலவையை ஊற்றும் முன் அந்த தட்டில் நெய் தடவக் கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

6. ஒரு அகன்ற தட்டையான அலகு கொண்ட கரண்டி கொண்டு கலவையை நன்றாக சமப்படுத்துங்கள். தேங்காய் துருவளை எடுத்து பிஸ்கட் கலவை மீது தூவி ஒரு தேங்காய் அடுக்கை உருவாக்குங்கள்.

7. இப்போது பேக்கிங் தட்டில் ஊற்றப்பட்ட கலவையை நன்கு சமப்படுத்தி அதன் மீது சாக்லேட் சிப்ஸை பரப்பவும்.

8. அப்பொழுது, கன்டென்ஸ்ட் பாலை ஊற்றி பாலால் ஆன ஒரு அடுக்கை உருவாக்குங்கள்.

9. இறுதியாக பால் அடுக்கின் மீது மிக்ஸ்ட் நட்களை பரப்பவும்.

10. இந்த கலவையை சுமார் 20 முதல் 30 நிமிடங்கள் வரை பேக் செய்யவும். கலவை குளிர்ந்த பின்னர் அதை பர்பி வடிவில் வெட்டி எடுங்கள்.

11. உங்களின் புதுமையான சாக்லேட் பர்பி விருந்தினர்களுக்கு தற்பொழுது பரிமாற தயாராக உள்ளது.

இது மிகவும் எளிமையான செய்முறை அல்ல. மற்றும் இதை செய்து முடிக்க சிறிய நேரம் பிடிக்கும். எனினும் இது மிகவும் ஆரோக்கியமானது. ஏனெனில் இதில் உலர் கொட்டைகள் மற்றும் தேங்காய் நிறைய உள்ளது.

உங்கள் குழந்தைகள் பட்டாசு வெடித்து, தீபம் ஏற்றி அங்கும், இங்கும் அழைந்து தீபாவளியை கொண்டாடி களைத்து வரும் பொழுது அவர்களின் முன்னால் இந்த பர்பியை நீட்டுங்கள். அவர்களின் முகம் மலர்வதை கண்டு மகிழுங்கள்.

உங்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

English summary

Diwali Special: Chocolate Barfi Recipe

Diwali Special: Chocolate Barfi Recipe
Subscribe Newsletter