For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெள்ளரிக்காய் பாயாசம்

By Maha
|

வெள்ளரிக்காயை அப்படியே அல்லது வெறும் ஜூஸ் மட்டும் தான் போட்டு குடிக்க முடியும் என்று நினைத்தால், அது தான் தவறு. வெள்ளரிக்காயை பலவாறு சமைத்து சாப்பிடலாம். அவற்றில் ஒன்று தான் பாயாசம். ஆம், வெள்ளரிக்காயை பாயாசம் செய்தும் சாப்பிடலாம்.

இது மிகவும் சுவையுடன் இருக்கும். மேலும் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். சரி, இப்போது அந்த வெள்ளரிக்காய் பாயாசம் எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Cucumber Payasam

தேவையான பொருட்கள்:

வெள்ளரிக்காய் - 2 கப்
ஜவ்வரிசி - 1/4 கப்
கண்டென்ஸ்டு மில்க் - 1/4 கப்
தண்ணீர் - 2 கப்
பால் - 1 கப்
சர்க்கரை - 1/4 கப்
ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்
நெய் - 2-3 டேபிள் ஸ்பூன்
முந்திரி மற்றும் பாதாம் - 2-3 டேபிள் ஸ்பூன்
உலர் திராட்சை - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் ஜவ்வரிசியை நீரில் 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் வெள்ளரிக்காயை துருவியோ அல்லது மெல்லிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

பிறகு ஊற வைத்துள்ள ஜவ்வரிசியை ஒரு வாணலியில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து வேக வைக்க வேண்டும்.

ஜவ்வரிசியானது பாதி வெந்ததும், அதில் வெள்ளரிக்காயை போட்டு, வெள்ளரிக்காய் நன்கு மென்மையாகும் வரை வேக வைக்க வேண்டும்.

பின்பு அதில் சர்க்கரை சேர்த்து கிளறி, பின் கண்டென்ஸ்டு மில்க் மற்றும் பால் சேர்த்து கிளறி, தீயை குறைவில் வைத்து 5 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும்.

இறுதியில் அதில் ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி இறக்க வேண்டும்.

அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்தமும், முந்திரி மற்றும் உலர் திராட்சை சேர்த்து வறுத்து, பாயாசத்தில் ஊற்றி கிளறினால், சுவையான வெள்ளரிக்காய் பாயாசம் ரெடி!!!

English summary

Cucumber Payasam

Cucumber Kheer (Vellarikai Payasam) is a very light and refreshing payasam. It is not as rich as the other traditional payasams. So it can be enjoyed even after a heavy meal. So this summer, be sure to make this payasam and enjoy with your loved ones. 
Story first published: Thursday, May 8, 2014, 17:28 [IST]
Desktop Bottom Promotion