Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
வெறும் 3 பொருள் இருந்தா போதும்.. ரொம்பவும் ஈஸியா கேக் செய்யலாம்.. எப்படின்னு பாருங்க..
Sweet Soft Cake Recipe In Tamil: கோடை விடுமுறை என்பதால் குழந்தைகள் வீட்டில் இருப்பதால், எந்நேரமும் ஏதாவது சாப்பிட கேட்டுக் கொண்டே இருப்பார்கள். இம்மாதிரியான நேரத்தில் கடைகளில் அதிக பணம் செலவழித்து ஸ்நாக்ஸ்களை வாங்கி கொடுப்பதற்கு பதிலாக, வீட்டில் உள்ள சில பொருட்களைக் கொண்டே ஸ்நாக்ஸ்களை செய்து கொடுத்தால், ஆரோக்கியமாக இருக்கும் அல்லவா?
அதுவும் உங்கள் குழந்தைகள் கேக்கை விரும்பி சாப்பிடுவார்கள் என்றால், அந்த கேக்கை கூட நீங்கள் வீட்டிலேயே செய்யலாம். அதுவும் வெறும் 3 பொருட்களைக் கொண்டே அட்டகாசமான சுவையில் கேக்கை செய்யலாம்.

உங்களுக்கு ஸ்வீட் சாப்ட் கேக்கை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஸ்வீட் சாப்ட் கேக் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* ரவை - 1 1/2 கப்
* சர்க்கரை - 3/4 கப்
* உப்பு - 2 சிட்டிகை
* சமையல் சோடா - 1/2 டீஸ்பூன்
* பால் - 1 1/2 கப்
சுகர் சிரப்பிற்கு...
* சர்க்கரை - 1/2 கப்
* தண்ணீர் - 1/2 கப்
* ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் ரவையை எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒருவேளை ரவை பெரியதாக இருந்தால், மிக்சர் ஜாரில் போட்டு ஒருமுறை
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அந்த தசையுடன் 3/4 கப் சர்க்கரை மற்றும் 2 சிட்டிகை உப்பை
சேர்க்க வேண்டும்.
* பின்பு அதில் சமையல் சோடா மற்றும் பால் சேர்த்து நன்கு கலந்து, மூடி
வைத்து 1/2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* அரை மணிநேரம் கழித்து, அந்த கலவையை கிளறி விட வேண்டும். பின் ஒரு
கேக் கிண்ணத்தை எடுத்து, அதில் நெய்யைத் தடவி, இந்த ரவை கலவையை ஊற்ற
வேண்டும்.
* பின் அதன் மேல் பாதாமை அழகாக வைத்து அலங்கரிக்க வேண்டும்.
* பிறகு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் ஒரு ஸ்டேண்ட்டை வைத்து,
10 நிமிடம் குறைவான தீயில் வைத்து சூடேற்றிக் கொள்ள வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து, குக்கரில் இந்த கேக் கிண்ணத்தை வைத்து, மூடி
வைத்து, 30 நிமிடம் குறைவான தீயில் வைத்து, கேக்கை வேக வைக்க
வேண்டும்.
* 30 நிமிடம் கழித்து, அடுப்பை அணைத்துவிட்டு, கிண்ணத்தை வெளியே
எடுத்து வைத்துவிட்டு, 5 நிமிடம் குளிர வைக்க வேண்டும்.
* அதற்குள் சுகர் சிரப்பை தயாரித்துக் கொள்ளுங்கள். அதற்கு ஒரு
பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தண்ணீரை ஊற்றி, அடுப்பில் வைத்து,
அத்துடன் ஏலக்காய் தூளை சேர்த்து கலந்து, சர்க்கரையை கரைய வைத்து
இறக்க வேண்டும்.
* பின் கேக் கிண்ணத்தின் முனைகளை கத்தியால் கீறி விட்டு, பின் ஒரு
தட்டை மேலே வைத்து தலைகீழாக திருப்பிப் போட்டு, ஒருமுறை தட்டினால்,
கேக் அழகாக தட்டில் விழும். அதன் பின் அந்த கேக்கை மீண்டும் கேக்
கிண்ணத்தில் வைத்து, கத்தியால் துண்டுகளாக கீறி விட வேண்டும்.
* இறுதியாக தயாரித்து வைத்துள்ள சுகர் சிரப்பை வடிகட்டி கேக்கில்
ஊற்றி 5 நிமிடம் அப்படியே ஊற வைத்து, அதன் பின் அதைஒரு தட்டில் மாற்றி
எடுத்துக் கொண்டால், சுவையான ஸ்வீட் சாப்ட் கேக் தயார்.
Image Courtesy: Akshaya. com



Click it and Unblock the Notifications