Latest Updates
-
வார ராசிபலன் (23 August 2026 - 29 August 2026)- உங்க ராசிப்படி இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும் தெரியுமா -
மலபார் சிக்கன் கறி ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இளம் வயதிலேயே சொந்த வீடு வாங்கும் யோகம் இருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
சவூதி அரேபியாவில் இந்திய ஓட்டுநர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
ஐயங்கார் ஸ்டைல் அஞ்சறைப் பெட்டி குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஆகஸ்ட் 28-ல் நடக்கும் சந்திர கிரகணத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துன்பங்கள் துரத்தப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
முட்டைக்கோஸும், உருளைக்கிழங்கும் வெச்சு இப்படி கிரேவி செய்யுங்க.. பூரி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 22 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கஷ்டங்கள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
அஸ்தமன நிலையில் புதன்! அடுத்த 3 வாரங்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
ராகு-கேது பெயர்ச்சியால் டிசம்பர் மாதம் வரை நரகத்தை அனுபவிக்கப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
சர்க்கரைவள்ளிக் கிழங்கும், இட்லி மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்ல இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யுங்க..
Sweet Potato Bonda Recipe In Tamil: மாலை வேளையில் உங்கள் வீட்டில் உள்ளோர் ஸ்நாக்ஸ் கேட்கிறார்களா? எப்போதும் ஒரே மாதிரி உருளைக்கிழங்கு, வெங்காயம் கொண்டு, பஜ்ஜி போண்டா செய்து போரடித்துவிட்டதா? உங்கள் வீட்டில் சர்க்கரைவள்ளிக் கிழங்கு உள்ளதா?
அப்படியானால் அந்த சர்க்கரைவள்ளிக் கிழங்கு கொண்டு ஒரு இனிப்பு போண்டா செய்யுங்கள். இந்த இனிப்பு போண்டா மிகவும் சுவையாக இருப்பதோடு, சத்தானதும் கூட. இதை ஒருமுறை உங்கள் வீட்டில் செய்தால், அடிக்கடி கொடுக்க கேட்பார்கள். அந்த அளவில் சுவை அற்புதமாக இருக்கும்.

உங்களுக்கு சர்க்கரைவள்ளிக் கிழங்கு போண்டா ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சர்க்கரைவள்ளிக் கிழங்கு போண்டா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சர்க்கரைவள்ளிக்கிழங்கு - 1/4 கிலோ
* துருவிய தேங்காய் - 1/4 மூடி
* ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - 1 சிட்டிகை
* சர்க்கரை - இனிப்பு சுவைக்கேற்ப
* எண்ணெய் பொரிப்பதற்கு தேவையான அளவு
கோட்டிங்கிற்கு...
* இட்லி மாவு - 1 கப்
* அரிசி மாவு - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு இட்லி பாத்திரத்தில் நீரை ஊற்றி கொதிக்க வைக்க
வேண்டும். நீர் கொதிக்க ஆரம்பித்ததும், சர்க்கரைவள்ளிக் கிழங்கை
நீரில் கழுவி, இட்லி தட்டில் வைத்து, இட்லி பாத்திரத்தில் வைத்து மூடி
5 நிமிடம் வேக வைத்து இறக்க வேண்டும்.
* பின் சர்க்கரைவள்ளிக் கிழங்கின் தோலை நீக்கிவிட்டு, ஒரு
பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.
* பின்பு அத்துடன் துருவிய தேங்காய், ஏலக்காய் தூள், ஒரு சிட்டிகை
உப்பு மற்றும் உங்களுக்கு எவ்வளவு இனிப்புச் சுவை வேண்டுமோ, அந்த அளவு
சர்க்கரை சேர்க்க வேண்டும்.
* பிறகு கரண்டியால் அல்லது கையால் நன்கு மசித்து விட வேண்டும்.
* அடுத்து பிசைந்த கிழங்கை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, ஒரு
தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பாத்திரத்தில் இட்லி மாவை எடுத்துக் கொள்ள வேண்டும். இட்லி
மாவு நீராக இருந்தால், மாவை ஓரளவு கெட்டியாக்க தேவையான அளவு அரிசி
மாவை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இப்போது இந்த மாவானது கோட்டிங்
கொடுப்பதற்கு ஏற்ற பதத்தில் இருக்க வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், உருட்டி வைத்துள்ள கிழங்கை மாவில்
பிரட்டி, எண்ணெயில் போட வேண்டும். இதேப் போன்று ஒரே வேளையில் ஒரு 4-5
உருண்டைகளைப் போடுங்கள். முக்கியமாக உருண்டைகளைப் போட்ட உடனே
கரண்டியால் கிளறி விடாமல், 1 நிமிடம் கழித்து கிளறி விட்டு,
பொன்னிறமானதும் எடுத்தால், சுவையான சர்க்கரைவள்ளிக் கிழங்கு போண்டா
தயார்.
Image Courtesy: You Too Can Cook



Click it and Unblock the Notifications