Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் மிளகு குழம்பு ரெசிபி - ஒருதடவை ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமா இருக்கும் -
மே 17-க்கு முன் புதுமனை புகுவிழா நடத்தப்போறீங்களா? செல்வம் பெருக இந்த வாஸ்து ரகசியத்தை மிஸ் பண்ணாதீங்க! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
மல்லி தோசையும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க... -
இன்றைய ராசிபலன் 12 மே 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்கணும் -
செவ்வாய்-புதன் சேர்க்கையால் உருவாகியுள்ள தன யோகம்: இன்று முதல் இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
குரு-சுக்கிரன் உருவாக்கும் கஜலக்ஷ்மி யோகத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உள்ளங்கையில் இந்த 'ராஜலட்சுமி யோகம்' இருப்பவர்கள் கோடீஸ்வரராக பிறந்தவர்களாம் - உங்க கையில் இருக்கா? -
விளக்கெண்ணெயுடன் இந்த 5 எண்ணெயை கலந்து யூஸ் பண்ணுங்க.. தலைமுடி 2 மடங்கு வேகத்துல வளரும்.. -
ஆந்திரா கறிவேப்பிலை சட்னி ரெசிபி - அரைச்சு பாருங்க, இட்லி, தோசைக்கு டக்கரா இருக்கும்
ஸ்வீட் கார்ன் கிரேவி
உங்கள் குழந்தைகளுக்கு ஸ்வீட் கார்ன் ரொம்ப பிடிக்குமா? இதுவரை ஸ்வீட் கார்னை வேக வைத்து மட்டும் தான் கொடுத்திருக்கிறீர்களா? அப்படியானால் இனிமேல் ஸ்வீட் கார்னைக் கொண்டு கிரேவி செய்து கொடுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கு ஸ்வீட் கார்ன் ரொம்ப பிடிக்குமா? இதுவரை ஸ்வீட் கார்னை வேக வைத்து மட்டும் தான் கொடுத்திருக்கிறீர்களா? அப்படியானால் இனிமேல் ஸ்வீட் கார்னைக் கொண்டு கிரேவி செய்து கொடுங்கள். இந்த கிரேவி சப்பாத்திக்கு சூப்பராக இருக்கும். அதோடு அனைவருமே விரும்பி சாப்பிடுமாறு சுவையாகவும் இருக்கும்.

உங்களுக்கு ஸ்வீட் கார்ன் கிரேவி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஸ்வீட் கார்ன் கிரேவியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* ஸ்வீட் கார்ன் - 1 கப்
* தண்ணீர் - 1 கப் (கார்னை வேக வைப்பதற்கு)
* கெட்டியான தேங்காய் பால் - 1 கப்
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 2 (அரைத்தது)
* இஞ்சி பூண்டு விழுது - 1 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 1 (நீளமாக கீறியது)
செய்முறை:
* முதலில் குக்கரில் ஸ்வீட் கார்னை போட்டு, அதில் ஒரு கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, 3-4 விசில் விட்டு இறக்கி, விசில் போதும் குக்கரைத் திறந்து நீரை வடித்துவிட வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம், பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்னர் அதில் வெங்காயத்தைப் போட்டு வதக்கி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, வாசனை போக வதக்க வேண்டும்.
* பின்பு அதில் அரைத்த தக்காளியை சேர்த்து சிறிது உப்பு தூவி, பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பின் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா மற்றும் சீரகப் பொடி சேர்த்து 2 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் வேக வைத்துள்ள கார்னை நீருடன் சேர்த்து கிளறி, 2 நிமிடம் மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.
* அடுத்து அதில் தேங்காய் பால் சேர்த்து கிளறி, ஒரு கொதி வந்ததும், மேலே சிறிது கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான ஸ்வீட் கார்ன் கிரேவி தயார்.
குறிப்பு:
* வேண்டுமானால் இதில் தேங்காய் பாலுக்கு பதிலாக வழக்கமான பாலை சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் ஃப்ளேவர் வேறுபடும்.
* தக்காளியை அரைத்து பயன்படுத்துவதற்கு பதிலாக, பொடியாக நறுக்கியும் பயன்படுத்தலாம்.
* சுவையை மேலும் அதிகரிக்க ஒரு டேபிள் ஸ்பூன் பிரஷ் க்ரீம் சேர்த்துக் கொள்ளலாம்.
* தேங்காய் பால் சேர்த்ததும் அதிகம் கொதிக்கவிடாதீர்கள்.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications











