Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
பத்தே நிமிடத்தில் ருசியான.. ஸ்வீட் போண்டா செய்வது எப்படி?
உங்கள் குழந்தைகள் போண்டாவை விரும்பி சாப்பிடுவார்களா? உங்கள் வீட்டில் கோதுமை மாவு மற்றும் வாழைப்பழம் உள்ளதா? அப்படியானால் அவற்றைக் கொண்டு அட்டகாசமான சுவையில் ஸ்வீட் போண்டா செய்து கொடுங்கள்.
உங்கள் குழந்தைகள் மாலை வேளையில் ஸ்நாக்ஸ் சாப்பிட கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் ஸ்நாக்ஸ் எதுவும் இல்லையா? உங்கள் குழந்தைகள் போண்டாவை விரும்பி சாப்பிடுவார்களா? உங்கள் வீட்டில் கோதுமை மாவு மற்றும் வாழைப்பழம் உள்ளதா? அப்படியானால் அவற்றைக் கொண்டு அட்டகாசமான சுவையில் ஸ்வீட் போண்டா செய்து கொடுங்கள். இந்த ஸ்வீட் போண்டாவை பத்தே நிமிடத்தில் செய்துவிடலாம். இது குழந்தைகளின் பசியை உடனே போக்கும். முக்கியமாக இந்த ஸ்வீட் போண்டா குழந்தைகள் மட்டுமின்றி, பெரியோர்களும் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும்.

உங்களுக்கு ஸ்வீட் போண்டாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஸ்வீட் போண்டா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கோதுமை மாவு - 2 கப்
* அரிசி மாவு - 1/4 கப்
* உப்பு - 1 சிட்டிகை
* பேக்கிங் சோடா - 1/4 டீஸ்பூன்
* சுக்கு பொடி - 1/4 டீஸ்பூன்
* ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்
* வெல்லம் - 3/4 கப்
* கனிந்த பெரிய வாழைப்பழம் - 1
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, அரிசி மாவு, உப்பு, பேக்கிங் சோடா, சுக்கு பொடி, ஏலக்காய் பொடி ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு, 1/2 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, வெல்லத்தை கரைய வைக்க வேண்டும். வெல்லம் முற்றிலும் கரைந்ததும், அதை இறக்கி வடிகட்டி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு நன்கு கனிந்த வாழைப்பழத்தை நன்கு கையால் பிசைந்து, அதை மாவில் சேர்க்க வேண்டும்.
* பின் வெல்ல கரைசலை மாவில் ஊற்றி, சற்று கெட்டியாக போண்டா மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும். எண்ணெய் சூடானதும், சிறிது போண்டா மாவை எடுத்து, எண்ணெயில் போட்டு மிதமான தீயில் வைத்து பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
* இதேப் போல் அனைத்து மாவையும் எண்ணெயில் போண்டாக்களாக போட்டு பொரித்து எடுத்தால், ஸ்வீட் போண்ட தயார்.



Click it and Unblock the Notifications