Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
1/2 கப் ரவையும், 2 கப் மைதாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல 15 நிமிடத்தில் இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க..
Tea Kadai Sweet Appam Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோர் மாலை வேளையில் காபி, டீ குடிக்கும் போது ஸ்பெஷலாக ஸ்நாக்ஸ் ஏதாவது செய்து கொடுக்க கேட்கிறார்களா? அப்போது வழக்கமாக செய்யும், வடை, பஜ்ஜி, போண்டாவை செய்யாமல், உங்கள் வீட்டில் 1/2 கப் ரவையும், 2 கப் மைதா மாவும் இருந்தால், அவற்றைக் கொண்டு டீக்கடை இனிப்பு அப்பம் செய்யுங்கள்.
இந்த அப்பம் செய்வதற்கு வெறும் 15 நிமிடங்களே போதுமானது. ஒருமுறை இந்த அப்பத்தை செய்தால், பின் உங்கள் வீட்டில் உள்ளோர் அடிக்கடி செய்து கொடுக்கச் சொல்வார்கள். குறிப்பாக இந்த அப்பமானது சூடாக மட்டுமின்றி, நன்கு ஆற வைத்து சாப்பிடவும் அருமையாக இருக்கும்.

உங்களுக்கு டீக்கடை இனிப்பு அப்பத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே டீக்கடை இனிப்பு அப்பம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
ஊற வைப்பதற்கு...
* ரவை - 1/2 கப்
* தண்ணீர் - 1 1/2 கப்
பிற பொருட்கள்..
* சர்க்கரை - 1 கப்
* காய்ச்சிய பால் - 1 கப்
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* அரிசி மாவு - 1/4 கப்
* மைதா - 2 கப்
* பேக்கிங் சோடா - 2 சிட்டிகை
* ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் ரவையை எடுத்து, அத்துடன் நீரை ஊற்றி
கலந்து, 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் சர்க்கரையை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பிறகு ஒரு பாத்திரத்தில் பொடித்த சர்க்கரையை எடுத்து, அத்துடன்
காய்ச்சிய பாலை ஊற்றி, அதோடு நெய்யையும் சேர்த்து பீட்டர்
பயன்படுத்தி, சர்க்கரை கரையும் வரை நன்கு அடித்து கலந்து விட
வேண்டும்.
* பின்னர் அதில் அரிசி மாவு, மைதா மாவு ஆகியவற்றை சேர்த்து
கட்டிகளின்றி நன்கு அடித்து கலந்து விட வேண்டும்.
* அதன் பின் அதில் ஊற வைத்துள்ள ரவையை நீருடன் அப்படியே சேர்த்து
நன்கு கலந்து விட வேண்டும்.
* அடுத்து அதில் பேக்கிங் சோடா மற்றும் ஏலக்காய் தூளை சேர்த்து நன்கு
கலந்து கொள்ள வேண்டும். ஆனால் பேக்கிங் சோடாவை சேர்த்துவிட்டால், உடனே
அப்பம் சுட வேண்டும். இல்லாவிட்டால் அப்பம் நிறைய எண்ணெயை
உறிஞ்சும்.
* இறுதியாக ஒரு தட்டையான வாணலியை அடுப்பில் வைத்து, அதில்
பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி ஓரளவு சூடானதும், ஒரு சிறிய
குழிக்கரண்டியில் மாவை எடுத்து, எண்ணெயில் ஊற்றி, மிதமான தீயில்
வைத்து முன்னும் பின்னும் திருப்பிப் போட்டு பொரித்து எடுத்தால்,
டீக்கடை இனிப்பு அப்பம் தயார்.



Click it and Unblock the Notifications