Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
ருசியான... சுவரொட்டி கிரேவி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க...
Suvarotti Gravy Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோருக்கு மட்டன் சுவரொட்டி பிடிக்குமா? இந்த சுவரொட்டியை மண்ணீரல் என்பார்கள். வீட்டில் சுவரொட்டி வாங்கினால், அந்த சுவரொட்டியை எப்போதும் ஒரே சுவையில், ஒரே மாதிரி தான் செய்வீர்களா? அப்படியானால் ஒருமுறை சுவரொட்டியைக் கொண்டு கிரேவி செய்யுங்கள். இப்படி செய்யும் கிரேவி, இட்லியுடன் மட்டுமின்றி, சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும்.
முக்கியமாக இந்த சுவரொட்டி கிரேவி செய்வது மிகவும் சுலபம். இந்த சுவரொட்டியை அடிக்கடி வாங்கி சமைத்து சாப்பிட்டால், உடலில் இரத்தம் நன்கு ஊறும். சொல்லப்போனால் உணவுகளிலேயே சுவரொட்டி உடலில் இரத்தத்தின் அளவை வேகமாக அதிகரிக்கும். அந்த அளவு சத்தான ஒன்று தான் சுவரொட்டி என்னும் மண்ணீரல். இதுவரை சுவரொட்டி கிரேவியை செய்ததில்லை என்றால், இந்த வார விடுமுறையில் வாங்கி தவறாமல் ட்ரை செய்து பாருங்கள்.

உங்களுக்கு சுவரொட்டி கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சுவரொட்டி கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 2 கொத்து
* பச்சை மிளகாய் - 1 (கீறியது)
* சின்ன வெங்காயம் - 20 (அல்லது) பெரிய வெங்காயம் - 2 (பொடியாக
நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மண்ணீரல் - 2
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - 1 1/4 கப்
பொடிப்பதற்கு...
* மிளகு - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் மிளகு, சீரகம், சோம்பு ஆகியவற்றை
சேர்த்து நன்கு அரைத்து பொடித்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய்
சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து நிறம்
மாற நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் பொடியாக நறுக்கிய
தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் சுவைக்கேற்ப உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து
ஒருமுறை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் கழுவி துண்டுகளாக்கி வைத்துள்ள
மண்ணீரல்/சுவரொட்டியை சேர்த்து கிளறி விட வேண்டும்.
* அடுத்து அதில் மல்லித் தூள், மிளகாய் தூள், அரைத்து வைத்துள்ள மிளகு
சோம்பு சீரக பொடியை சேர்த்து கிளறி, 1 1/4 கப் நீரை ஊற்றி கிளறி விட
வேண்டும்.
* பின்னர் அதை மூடி வைத்து மிதமான தீயில் வைத்து, நீர் வற்றி கிரேவி
பதத்திற்கு வரும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
* கிரேவி பதத்திற்கு வந்ததும், அதை இறக்கினால், சுவையான சுவரொட்டி
கிரேவி தயார்.



Click it and Unblock the Notifications