Latest Updates
-
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
சுரைக்காய் இருந்தா... ஈவ்னிங் 10 நிமிஷத்துல இந்த வடையை செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்...
Bottle Gourd Vada Recipe In Tamil: மாலை வேளையில் உங்கள் வீட்டில் உள்ளோர் ஸ்நாக்ஸ் கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் சுரைக்காய் உள்ளதா? ஆனால் அந்த சுரைக்காயை யாரும் விரும்பி சாப்பிடமாட்டார்களா? இருப்பினும், இந்த சுரைக்காயைக் கொண்டு மாலை வேளையில் வடை செய்யுங்கள்.
இதனால் சுரைக்காய் பிடிக்காதவர்களும் சுரைக்காய் வடையை விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் சுரைக்காயில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால், கொளுத்தும் கோடையில் இதை அதிகம் உணவில் சேர்ப்பது மிகவும் நல்லது. மாலை வேளையில் 10 நிமிடத்தில் ஒரு வடை செய்ய நினைத்தால், இந்த சுரைக்காயை வடையை செய்யுங்கள்.

உங்களுக்கு சுரைக்காய் வடையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சுரைக்காய் வடை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சுரைக்காய் - 250 கிராம்
* வெங்காயம் - 1
* பச்சை மிளகாய் - 2
* கறிவேப்பிலை - 1 கொத்து
* கொத்தமல்லி - 1 கையளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* கடலைப்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
* பாசிப்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
* கடலை மாவு - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* பச்சரிசி மாவு - 3/4 கப்
* எள்ளு விதைகள் - 2 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் சுரைக்காயின் தோலை நீக்கிவிட்டு, அதை துருவிக் கொள்ள
வேண்டும்.
* பின் கடலைப்பருப்பு மற்றும் பாசிப்பருப்பை நீரில் 1/2 மணிநேரம் ஊற
வைக்க வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் துருவிய சுரைக்காயை எடுத்து, அத்துடன்
பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி
மற்றும் உப்பு சேர்த்து கைகளால் பிசைந்து விட்டு, 10 நிமிடம் ஊற வைக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் ஊற வைத்த கடலைப்பருப்பு மற்றும் பாசிப்பருப்பை
கழுவி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் கடலை மாவு, பச்சரிசி மாவு சேர்த்து, எள்ளு விதைகளை
சேர்த்து நன்கு பிசைந்து விட வேண்டும்.
* ஒருவேளை மிகவும் கெட்டியாக இருப்பதாக உணர்ந்தால், சிறிது நீரைத்
தெளித்துக் கொள்ளுங்கள்.
* பின் ஒரு வாழை இலை அல்லது பாலிதீன் கவரை எடுத்து, அதில் எண்ணெய்
தடவி, பிசைந்து வைத்துள்ள மாவை சிறிது எடுத்து நடுவே வைத்து, தட்டையாக
வடை போன்று தட்டி, நடுவே ஒரு துளையிட வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், தட்டி வைத்துள்ள வடையை சேர்த்து,
பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான சுரைக்காய் வடை தயார்.



Click it and Unblock the Notifications