Latest Updates
-
Panguni Month 2026: பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
120 ஆண்டுக்கு பின் ஏப்ரலில் உருவாகும் திரிகிரக யோகம் 2026: இந்த 3 ராசிகளை கோடீஸ்வரராக்குவது உறுதியாம்...! -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய தக்காளி வெங்காய பச்சடி - சூடான சாதத்துக்கு டக்கரா இருக்கும்.. ட்ரை பண்ணுங்க.. -
இந்தியாவில் முதலில் தொடங்கப்பட்ட வங்கி எது? அது தமிழ்நாட்டில் எந்த ஊரில் அந்த வங்கி தொடங்கப்பட்டது தெரியுமா? -
கோடையில் தினமும் ராகி ரொட்டி சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
சிங்கம் போல வலிமையும், தைரியமும் கொண்ட 4 பெண் ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
18 மாதம் கழித்து மீனம் செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
தேங்காய் தோசையும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்..
சப்பாத்திக்கு சுரைக்காயை வெச்சு இப்படி ஒரு சைடு டிஷ் பண்ணுங்க.. 2 சப்பாத்தி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க..
Surakkai Kadayal Recipe In Tamil: இரவு சப்பாத்தி செய்ய போகிறீர்களா? சப்பாத்திக்கு இன்று நீங்கள் இதுவரை செய்திராத ஒரு புது சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் வீட்டில் சுரைக்காய் உள்ளதா? அந்த சுரைக்காய் கொண்டு கடையல் செய்யுங்கள்.
இந்த சுரைக்காய் கடையல் சப்பாத்தியுடன் மட்டுமின்றி சாதத்துடன் சாப்பிடவும் நன்றாக இருக்கும். முக்கியமாக சுரைக்காயை இப்படி செய்யும் போது சுரைக்காய் பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள். அதுவும் இந்த கடையலை சப்பாத்தியுடன் சாப்பிட்டால், வீட்டில் உள்ளோர் 2 சப்பாத்தியை எக்ஸ்ட்ரா சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு சுரைக்காய் கடையலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சுரைக்காய் கடையல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பிஞ்சு சுரைக்காய் - 1
* எண்ணெய் - 3 டீஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* பூண்டு - 7-8 பல்
* பெரிய வெங்காயம் - 1
* வரமிளகாய் - 4 (உடைத்து விதைகளை நீக்கியது)
* தக்காளி - 2
* மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
* உப்பு - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - 1/4 லிட்டர்
செய்முறை:
* முதலில் பிஞ்சு சுரைக்காயை எடுத்து, அதன் தோலை நீக்கிவிட்டு,
பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானது,
கடுகு, வெந்தயம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் பூண்டு சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் வரமிளகாயை சேர்த்து
வதக்க வேண்டும்.
* பிறகு அதில் தக்காளியை சேர்த்து, அத்துடன் மஞ்சள் தூள், உப்பு,
மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து 3-4 நிமிடம் நன்கு வதக்க
வேண்டும்.
* பின் அதில் சுரைக்காயை சேர்த்து நன்கு 2 நிமிடம் கிளறி, நீரை ஊற்றி,
குக்கரை மூடி, 3 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, மத்து கொண்டு கடைந்து,
கொத்தமல்லியைத் தூவினால், சுவையான சுரைக்காய் கடையல் தயார்.
Image Courtesy: Ragas kitchen



Click it and Unblock the Notifications











