Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
சுரைக்காய் வெச்சு ஒருடைம் இப்படி பாயா செய்யுங்க.. ஆட்டுக்கால் பாயாவே தோத்துப்போயிடும்..
Bottle Gourd Paya Recipe In Tamil: புரட்டாசி மாதம் என்பதால் பல வீடுகளில் இந்த மாதத்தில் அசைவ உணவுகளை சாப்பிடமாட்டார்கள். உங்கள் வீட்டிலும் அப்படி தானா? அதுவும் ஞாயிற்றுக்கிழமை வந்தால் அசைவ உணவுக்கு இணையான சுவையைத் தரும் நல்ல சைவ உணவை சமைத்து சாப்பிட நினைக்கிறீர்களா?
அதுவும் ஞாயிற்றுக்கிழமை காலையில் உங்கள் வீட்டில், பூரி, சப்பாத்தி செய்யப் போகிறீர்களா? என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் சுரைக்காய் இருந்தால், அதைக் கொண்டு சுரைக்காய் பாயா செய்யுங்கள். இந்த பாயாவானது ஆட்டுக்கால் பாயாவையே தோற்கடிக்கும் அளவில் சுவையாக இருக்கும்.

உங்களுக்கு சுரைக்காய் பாயாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சுரைக்காய் பாயா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* சுரைக்காய் - 300 கிராம் (தோல் நீக்கி துண்டுகளாக்கப்பட்டது)
* தண்ணீர் - 1 டம்ளர்
* உப்பு - சுவைக்கேற்ப
* பச்சை மிளகாய் - 5
* கொத்தமல்லி - சிறிது
அரைப்பதற்கு...
* துருவிய தேங்காய் - 3/4 கப்
* பட்டை - 1 துண்டு
* ஏலக்காய் - 1
* கிராம்பு - 2
* இஞ்சி - சிறு துண்டு
* பூண்டு - 10 பல்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* முந்திரி - 10
* கசகசா - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் முந்திரி மற்றும் கசகசாவை சுடுநீரில் 10 நிமிடம் ஊற
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையை
சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் சுரைக்காயை சேர்த்து 2 நிமிடம் கிளறி விட
வேண்டும்.
* பின் அதில் 1 டம்ளர் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு
கிளறி, மூடி வைத்து, 7-8 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* அதற்குள் மிக்சர் ஜாரில் துருவிய தேங்காய், பட்டை, ஏலக்காய்,
கிராம்பு, இஞ்சி, பூண்டு, சோம்பு, ஊற வைத்த முந்திரி கசகசாவை நீருடன்
அப்படியே சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அரைத்த விழுதை கொதித்துக் கொண்டிருக்கும் காயுடன் சேர்த்து
கிளறி, தேவையான அளவு நீரை ஊற்றி, பச்சை மிளகாயை கீறிப் போட்டு, 5
நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* 5 நிமிடம் நன்கு கொதித்த பின், அதில் கொத்தமல்லியைத் தூவி கிளறி
இறக்கினால் சுவையான சுரைக்காய் பாயா தயார்.
Image Courtesy: Apoorvaa's Nalabagam



Click it and Unblock the Notifications