Latest Updates
-
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம் -
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா?
சுரைக்காய் வெச்சு தோசை செஞ்சுருக்கீங்களா? இல்லன்னா இன்னைக்கு ட்ரை பண்ணுங்க. செமயா இருக்கும்...
Suraikkai Dosa Recipe In Tamil: காலையில் என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? தோசை சுடலாம் என்று நினைத்தால் தோசை மாவு இல்லையா? அப்படியானால் கவலையை விடுங்கள். வீட்டில் சுரைக்காய் இருந்தால், அதைக் கொண்டு அட்டகாசமான சுவையில் தோசை செய்யலாம்.
இதுவரை சுரைக்காய் கொண்டு கூட்டு, சம்பார் தான் செய்திருப்பீர்கள். அடுத்த முறை சுரைக்காயை வெச்சு சமைப்பதாக இருந்தால், சுரைக்காய் தோசை செய்யுங்கள்.

இந்த சுரைக்காய் தோசை செய்வது மிகவும் சுலபம். மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். உங்களுக்கு சுரைக்காய் தோசை ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?
கீழே சுரைக்காய் தோசை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ங்ள்.
தேவையான பொருட்கள்:
* பச்சரிசி - 1 டம்ளர்
* சுரைக்காய் - 1 1/2 டம்ளர் (துண்டுகளாக்கப்பட்டது)
* சீரகம் - 1 டீஸ்பூன்
* மிளகு - 1/4 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 1
* இஞ்சி - 1 இன்ச் துண்டு
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் பச்சரிசியை நன்கு கழுவி, நீரில் 2 மணிநேரம் ஊற வைக்க
வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் ஊற வைத்துள்ள பச்சரிசியைப் போட்டு, சிறிது நீரை
ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து, ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ள
வேண்டும்.
* பின்பு அதே மிக்சர் ஜாரில் சுரைக்காய், மிளகு, சீரகம், பச்சை
மிளகாய், இஞ்சி மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு மென்மையாக
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அரைத்த சுரைக்காயை பச்சரிசி மாவுடன் சேர்த்து நன்கு கிளறி விட
வேண்டும். இந்த மாவை புளிக்க வைக்க வேண்டிய அவசியம் இல்லை. அரைத்த
உடனேயே பயன்படுத்தலாம்.
* இறுதியாக தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், குறைவான
தீயில் வைத்து, அரைத்து வைத்துள்ள மாவை தோசையாக சுட்டு, எண்ணெய் ஊற்றி
முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், சுவையான சுரைக்காய் தோசை
தயார்.



Click it and Unblock the Notifications