Latest Updates
-
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
கசப்பு இல்லாத சுண்டக்காய் சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
Sundakkai Chutney Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோர் சுண்டக்காய் என்றாலே சாப்பிடமாட்டார்களா? பொதுவாக சுண்டக்காயை குழம்பாகத் தான் செய்து சாப்பிடுவோம். ஆனால் இந்த சுண்டக்காயைக் கொண்டு சட்னி கூட செய்யலாம் என்பது தெரியுமா? அப்படி சுண்டக்காயை சட்னியாக செய்தால், அதை இட்லி, தோசையுடன் மட்டுமின்றி, சப்பாத்தியுடனும் சேர்த்து சாப்பிடலாம்.
குறிப்பாக இந்த பக்குவத்தில் சட்னி செய்யும் போது கசப்பு எதுவும் தெரியாது. சுண்டக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வருவது நல்லது. குறிப்பாக பெண்கள் இந்த சுண்டக்காயை உட்கொண்டு வந்தால், ஒழுங்கற்ற மாதவிடாய் சீராகும். வயிற்றில் புழு இருந்தாலும் அழியும்.

உங்களுக்கு சுண்டக்காய் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சுண்டக்காய் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சுண்டக்காய் - 1 கைப்பிடி
* கடலை எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* பூண்டு - 5 பல்
* வரமிளகாய் - 5
* புளி - சிறிய துண்டு
* தேங்காய் - சிறிது
* கறிவேப்பிலை - 1 கொத்து
* கொத்தமல்லி - சிறிது
* சின்ன வெங்காயம் - 20
* உப்பு - சுவைக்கேற்ப
* பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு..
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 1
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் சுண்டக்காயை உரலில் போட்டு நன்கு இடித்து, நீரில்
போட்டு, விதைகள் நீங்க அலசி, ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், தட்டி வைத்துள்ள சுண்டக்காயை சேர்த்து நன்கு
வதக்கி ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே எண்ணெயில் பூண்டு, வரமிளகாய், புளி, தேங்காய்,
கறிவேப்பிலையை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் சிறிது கொத்தமல்லி மற்றும் சின்ன வெங்காயத்தை சேர்த்து
நன்கு கண்ணாடி பதத்திற்கு வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* அதன் பின் மிக்சர் ஜாரில் வதக்கிய சுண்டைக்காய் மற்றும் வதக்கி
வைத்துள்ள வெங்காய கலவையை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி, சுவைக்கேற்ப
உப்பு, பெருங்காயத் தூள் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு அரைத்து
இறக்கி, ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலையை அடுப்பில் வைத்து, அதில் கடலை எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், வரமிளகாய் மற்றும்
கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அரைத்து வைத்துள்ள சட்னியுடன் சேர்த்து
கலந்தால், சுண்டக்காய் சட்னி தயார்.



Click it and Unblock the Notifications