Latest Updates
-
குப்பையை பணம் கொடுத்து இறக்குமதி செய்யும் வினோத நாடு - எந்த நாடு? ஏன் இப்படி செய்கிறது தெரியுமா? -
ஆகஸ்ட் இறுதியில் நடக்கும் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
செப்டம்பரில் சுக்கிரன் துலாம் ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் யார் தெரியுமா? -
கொத்தவரங்காயை இந்த பக்குவத்தில் பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
மஷ்ரூம் செட்டிநாடு மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - காரசாரமா சூப்பர் சைடிஷா இருக்கும் -
இதய நோய் வரக்கூடாதா? அப்ப அமெரிக்க டாக்டர் சொல்ற இந்த 5 பழக்கங்களை வெச்சுக்கோங்க.. -
கடல் நீர் முழுவதும் குடிநீராக மாறினால் உலகில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் வரை இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
தக்காளி தோசையும், உடுப்பி வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 18 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம்
பச்சை சுண்டைக்காயை இப்படி ஒருடைம் சட்னி செய்யுங்க.. கசப்பும் தெரியாது ருசியாவும் இருக்கும்..
Sundakkai Chutney Recipe In Tamil: இட்லி, தோசைக்கு இதுவரை நீங்கள் எத்தனையோ சட்னியை செய்திருப்பீர்கள். ஆனால் சுண்டைக்காய் கொண்டு சட்னி செய்துள்ளீர்களா? ஆம், சுண்டைக்காய் கொண்டும் சட்னி செய்யலாம். சுண்டைக்காய் கசப்பாக இருக்கும். இருப்பினும், அதை எண்ணெயில் நன்கு வதக்கிவிட்டு, பின் சட்னி செய்யும் போது கசப்பாக இருக்காது.
சுண்டைக்காய் சட்னி உடலுக்கு மிகவும் நல்லது. முக்கியமாக இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் உடலில் உள்ள புழுக்களை அழிக்கும் ஆற்றலைக் கொண்டது. எனவே இந்த சட்னியை அடிக்கடி செய்து சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

உங்களுக்கு சுண்டைக்காய் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சுண்டைக்காய் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* சுண்டைக்காய் - 1 கப்
* கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டேபிள் ஸ்பூன்
* பூண்டு - 7-8
* சின்ன வெங்காயம் - 10-12
* தேங்காய் - 2 துண்டு (துருவியது)
* கொத்தமல்லி - சிறிது
* தக்காளி - 1 (நறுக்கியது)
* வரமிளகாய் - 4
* புளி - சிறிய துண்டு
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையன அளவு
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் சுண்டைக்காயை எடுத்து, அதன் காம்புகளை நீக்கிவிட
வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், சுண்டைக்காயை சேர்த்து, அதன் தோல்
வெள்ளையாகும் வரை வதக்கி, ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அதே வாணலியில் மீண்டும் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, பூண்டு, சின்ன
வெங்காயம், துருவிய தேங்காய், கொத்தமல்லி சேர்க்க வேண்டும்.
* அதன் பின் நறுக்கிய தக்காளி, வரமிளகாய், சிறிய துண்டு புளி
சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதை இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் வதக்கிய
பொருட்களுடன், சுண்டைக்காயையும் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி, சற்று
கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து
தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான சுண்டைக்காய் சட்னி
தயார்.
Image Courtesy: Madras Virunthu



Click it and Unblock the Notifications