Latest Updates
-
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரர்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை சரியாக செய்யும் திறமைசாலிகளாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
எச்சரிக்கை! உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப அசால்ட்டா இருக்காதீங்க.. -
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது
வாரம் ஒருமுறை சுண்டக்காயை இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. குடல் புழுக்கள் வெளியேறி உடம்பு சுத்தமா இருக்கும்..
Sundakkai Chutney Recipe In Tamil: காலையில் வீட்டில் இட்லி, தோசை தான் செய்யப் போகிறீர்களா? இன்னும் அதற்கு சைடு டிஷ்ஷை முடிவு செய்யவில்லையா? சற்று வித்தியாசமான சுவையுடைய, அதே சமயம் ஆரோக்கியமான ஒரு சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் பச்சை சுண்டக்காய் உள்ளதா?
ஆனால் அந்த சுண்டக்காயை வீட்டில் உள்ளவர்கள் சாப்பிடமாட்டார்களா? அப்படியானால் அவர்களுக்கு சுண்டக்காயைக் கொண்டு சட்னி செய்து கொடுங்கள். இப்படி சட்னி செய்தால், அதில் உள்ள கசப்பும் தெரியாது, ருசியாகவும் இருக்கும். முக்கியமாக இந்த சட்னி இட்லி, தோசையுடன் மட்டுமின்றி, சாதத்துடன் சாப்பிடவும் அருமையாக இருக்கும்.

உங்களுக்கு சுண்டக்காய் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சுண்டக்காய் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வதக்குவதற்கு...
* எண்ணெய் - 1 1/4 டீஸ்பூன்
* சுண்டைக்காய் - 1 கைப்பிடி
* வரமிளகாய் - 4
* புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
* சின்ன வெங்காயம் - 10
* கறிவேப்பிலை - 1 கொத்து
* கல் உப்பு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
வறுப்பதற்கு...
* எண்ணெய் - 1/2 டீஸ்பூன்
* கடலைப்பருப்பு -1 டேபிள் ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டேபிள் ஸ்பூன்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 1
செய்முறை:
* முதலில் சுண்டக்காயை நீரில் கழுவி, அதை இரு துண்டுகளாக வெட்டிக்
கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 1/4 டீஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் துண்டுகளாக்கப்பட்ட சுண்டக்காயை
சேர்த்து நன்கு நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் வரமிளகாய், புளி, நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும்
கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் கல் உப்பு மற்றும் சீரகம் சேர்த்து நன்கு வதக்கி
இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/2 டீஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து
நன்கு பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* அடுத்து மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்கள் அனைத்தையும் சேர்த்து,
சிறிது நீரை ஊற்றி அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, சிறிது நீரை
ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக தாளிப்பதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2
டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு,
கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து
கிளறினால், சுவையான சுண்டக்காய் சட்னி தயார்.



Click it and Unblock the Notifications