Latest Updates
-
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது!
ஈவ்னிங் நேரத்துல பஜ்ஜி மிளகாய் உள்ளே இத வெச்சு பஜ்ஜி சுடுங்க.. பசியும் அடங்கும்.. ருசியாவும் இருக்கும்...
Stuffed Paneer Milagai Bajji Recipe In Tamil: மாலை வேளையில் பள்ளி முடிந்து பசியுடன் வரும் பிள்ளைக்கு வயிறு நிரம்புமாறான ஒரு டீ டைம் ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? உங்கள் பிள்ளைகள் பஜ்ஜியை விரும்பி சாப்பிடுவார்களா?
உங்கள் வீட்டில் பஜ்ஜி மிளகாயும், பன்னீரும் இருக்கா? அப்படியானால் அவற்றைக் கொண்டு அட்டகாசமான சுவையில் ஸ்டப்டு பன்னீர் மிளகாய் பஜ்ஜியை செய்யுங்கள். இந்த பஜ்ஜி மிகவும் அருமையாக இருக்கும். ஒருமுறை செய்தால், அடிக்கடி இந்த பஜ்ஜியை செய்து கொடுக்க கேட்பார்கள்.

உங்களுக்கு ஸ்டப்டு பன்னீர் மிளகாய் பஜ்ஜியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஸ்டப்டு பன்னீர் மிளகாய் பஜ்ஜி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பிரட் - 4
* பன்னீர் - 125 கிராம் (துருவியது)
* வேக வைத்த உருளைக்கிழங்கு - 1
* சிறிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
கோட்டிங்கிற்கு...
* மைதா - 1/2 கப்
* உப்பு - சிறிது
* மிளகுத் தூள் - சிறிது
* தண்ணீர் - சிறிது
செய்முறை:
* முதலில் பிரட் துண்டுகளை எடுத்து, அவற்றை துண்டுகளாக்கி மிக்சர்
ஜாரில் போட்டு பல்ஸ் மோடில் வைத்து பொடித்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொடித்த பிரட்டை
சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்து, ஒரு தட்டில் போட்டுக் கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் துருவிய பன்னீர், வேக வைத்து மசித்த
உருளைக்கிழங்கு, பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கொத்தமல்லியை
சேர்க்க வேண்டும்.
* பின் அதில் கரம் மசாலா, சீரகத் தூள், மிளகாய் தூள், சுவைக்கேற்ப
உப்பு சேர்த்து கைகளால் நன்கு பிசைந்து விட வேண்டும்.
* பிறகு பஜ்ஜி மிளகாயை ஒவ்வொன்றாக எடுத்து, நடுவே கீறி அதனுள் உள்ள
விதைகளை நீக்கிவிட்டு, பன்னீர் மசாலாவை உள்ளே வைத்து நிரப்பிக் கொள்ள
வேண்டும்.
* பின் ஒரு அகலமான பாத்திரத்தில் மைதா மாவு, சிறிது உப்பு, மிளகுத்
தூள் மற்றும் நீர் சேர்த்து, மிகவும் நீராகவோ அல்லது கெட்டியாகவோ
இல்லாமல் மிதமான அளவில் கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடானதும், பஜ்ஜி மிளகாயை ஒவ்வொன்றாக எடுத்து, மாவில்
பிரட்டி, பின் பிரட் தூளில் பிரட்டி, அதன் பின் எண்ணெயில் போட்டு
பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான ஸ்டப்டு பன்னீர் மிளகாய்
பஜ்ஜி தயார்.
Image Courtesy: Madras Samayal



Click it and Unblock the Notifications