Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
ஸ்டப்டு பிரட் பஜ்ஜி
மாலை வேளையில் பள்ளி முடிந்து பசியுடன் வரும் குழந்தைகளுக்கு ஒரு நல்ல சுவையான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைத்தால், ஸ்டப்டு பிரட் பஜ்ஜி செய்து கொடுங்கள்.
குளிர்காலத்தில் மாலை வேளையில் காபி, டீ குடிக்கும் போது பஜ்ஜி சாப்பிட பலருக்கும் பிடிக்கும். அதுவும் மாலை வேளையில் பள்ளி முடிந்து பசியுடன் வரும் குழந்தைகளுக்கு ஒரு நல்ல சுவையான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைத்தால், ஸ்டப்டு பிரட் பஜ்ஜி செய்து கொடுங்கள். இந்த ஸ்டப்டு பிரட் பஜ்ஜி பசியை தணிப்பதோடு, சற்று வித்தியாசமான சுவையிலும் இருக்கும். மேலும் இது 15 நிமிடத்தில் செய்யக்கூடிய வகையில், எளிமையான செய்முறையைக் கொண்டது.

உங்களுக்கு ஸ்டப்டு பிரட் பஜ்ஜி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஸ்டப்டு பிரட் பஜ்ஜி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
உள்ளே வைப்பதற்கு...
* பெரிய உருளைக்கிழங்கு - 2
* பச்சை மிளகாய் -1-2 (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* புதினா - சிறிது (பொடியாக நறுக்கியது)
* மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
* மாங்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
பஜ்ஜி மாவிற்கு...
* கடலை மாவு - 1 கப்
* ஓமம் - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
* கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
பிற பொருட்கள்..
* பிரட் - 4-5 துண்டுகள்
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் உருளைக்கிழங்கை குக்கரில் போட்டு, நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, 2-3 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். விசில் போனதும் குக்கரைத் திறந்து, உருளைக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு, உருளைக்கிழங்கை மசித்துக் கொள்ள வேண்டும்.
* பின் மசித்த உருளைக்கிழங்குடன், கொத்தமல்லி, புதினா, பச்சை மிளகாய், மிளகாய் தூள், மஞ்சள் தூள், மாங்காய் தூள், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு பிசைந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் கடவை மாவு, ஓமம், மிளகாய் தூள், கரம் மசாலா, பெருங்காயத் தூள் மற்றும் சுவைக்கேற்க உப்பு சேர்த்து, 1/2 கப் நீரை ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும். இந்த பஜ்ஜி மாவானது மிகவும் நீராகவோ அல்லது மிகவும் கெட்டியாகவோ இருக்கக்கூடாது. மிதமான அளவில் இருக்க வேண்டும்.
* பிறகு பிரட் துண்டுகளை எடுத்து, அவற்றை முக்கோண வடிவில் வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பிரட் துண்டை எடுத்து, அதன் மேல் சிறிது உருளைக்கிழங்கு கலவையை பரப்பி, அதன் மேல் மற்றொரு முக்கோண வடிவ பிரட் துண்டை வைத்து, சாண்விட்ச் போன்று வைக்க வேண்டும். இதேப் போல் அனைத்து பிரட் துண்டுகளையும் செய்து கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடானதும், செய்து வைத்துள்ள சாண்ட்விச்சை தயாரித்து வைத்துள்ள பஜ்ஜி மாவில் பிரட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இதேப் போன்று அனைத்து பிரட் துண்டுகளையும் பொரித்து எடுத்தால், சுவையான ஸ்டப்டு பிரட் பஜ்ஜி தயார்.
Image Courtesy: vegrecipesofindia



Click it and Unblock the Notifications
