Latest Updates
-
1/2 கப் ரவையும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ரசனை மிகுந்தவர்களாகவும், அழகானவர்களாகவும் இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்கள் பிறந்த தேதியில் ஒரே எண்கள் அடிக்கடி வருதா? அதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
பேரரசுகளின் கல்லறை என்று அழைக்கப்படும் ஆபத்தான நாடு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
பெண்களே! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. அது புற்றுநோயா இருக்கலாம்.. எச்சரிக்கும் டாக்டர்! -
4 முட்டை இருந்தா இப்படி செட்டிநாடு ஸ்டைலில் புளிக்குழம்பு செஞ்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இண்டர்நெட்டை கண்டுபிடித்தது யார்? இந்தியாவிற்கு இண்டர்நெட் எந்த வருடம் வந்தது தெரியுமா? -
அக்டோபரில் சிம்ம ராசிக்கு செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
ரவா குழிப்பணியாரமும்.. தேங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க..
ஸ்ரீரங்கம் ஸ்பெஷல் வத்த குழம்பு ரெசிபி... ஒரு தடவ செஞ்சு பாருங்க... இனிமே எல்லா வாரமும் செய்வீங்க...!
Srirangam Vatha Kulambu Recipe in Tamil: பெரும்பாலான வீடுகளில் சாம்பார் அல்லது புளிக்குழம்புதான் பிரதான குழம்புகளாக இருக்கும். அதனால்தான் ஹோட்டல்களுக்கு சென்றால் அனைவரும் காரக்குழம்பு மற்றும் வத்தக் குழம்பு போன்றவற்றை விரும்பி சாப்பிடுகிறார்கள். வத்தக் குழம்பு வைக்கும் பக்குவம் தெரியாததால்தான் பெரும்பாலானவர்கள் அதை செய்வதில்லை.
வத்தக் குழம்புகளில் பல வகைகள் உள்ளது, அதிலும் ஸ்ரீரங்கம் வத்தக் குழம்பு மிகவும் பிரபலமானது. ஸ்ரீரங்கம் வத்தக் குழம்பு சாப்பிட அங்குதான் செல்ல வேண்டுமென்று அவசியமில்லை. உங்கள் வீட்டிலேயே சூப்பராக செய்து சாப்பிடலாம். இந்த பதிவில் ஸ்ரீரங்கம் ஸ்பெஷல் வத்தக் குழம்பை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:
- சுண்டக்காய் - 1 கப்
- வெந்தயம் - 2 டீஸ்பூன்
- உளுந்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
- துவரம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
- மல்லி விதை - 2 டேபிள் ஸ்பூன்
- மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
- பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
- வரமிளகாய் - 4
- புளி - எலுமிச்சை அளவு
- மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
- சின்ன வெங்காயம் - 20
- வெல்லம் - 1 டேபிள் ஸ்பூன்
- அரிசி - 1 டேபிள் ஸ்பூன்
- கறிவேப்பிலை - ஒரு கொத்து
- உப்பு - தேவையான அளவு
- நல்லெண்ணெய் - தேவையான அளவு
தாளிக்க:
- கடுகு - 1 டீஸ்பூன்
- உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
- கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
- முதலில் புளியை ஊற வைத்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.
- சின்ன வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் வெந்தயத்தை வறுத்து, பொடியாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- பின்னர் அதே கடாயை அடுப்பில் வைத்து, அதில் வரமிளகாய், மிளகு, அரிசி, மல்லி, துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து வறுத்து இறக்கி, குளிர வைக்கவும், பின்னர் மிக்ஸியில் போட்டு பொடி செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
- பிறகு மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்த, பின் நறுக்கிய சின்ன வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
- பின் வெங்காயம் நன்றாக வதங்கியதும் சுண்டக்காய் சேர்த்து நன்கு வதக்கி, அத்துடன் வெந்தயப் பொடி சேர்த்து நன்கு கிளறி விடவும்.
- பின்னர் அதில் கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை சேர்த்து கொதிக்க விடவும்.
- பின் அதில் அரைத்து வைத்துள்ள பொடி, மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், வெல்லம், கறிவேப்பிலை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பச்சை வாசனை போக கொதிக்க விடவும்.
- குழம்பு நன்கு கெட்டியான பதத்திற்கு வந்தவுடன் அதன் மேல் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி இறக்கினால், ஸ்ரீரங்கம் வத்த குழம்பு ரெடி...!



Click it and Unblock the Notifications
