Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
இலங்கை ஸ்பெஷல் கத்திரிக்காய் கிரேவி
நீங்கள் இதுவரை பல ஸ்டைல்களில் கத்திரிக்காய் கிரேவி செய்திருப்பீர்கள். ஆனால் இலங்கை ஸ்டைல் கத்திரிக்காய் கிரேவி ஒரு வித்தியாசமான அனுபவத்தை உங்களுக்கு கொடுக்கும்.
இலங்கையில் மிகவும் பிரபலமான ஒரு ரெசிபி தான் கத்திரிக்காய் கிரேவி. நீங்கள் இதுவரை பல ஸ்டைல்களில் கத்திரிக்காய் கிரேவி செய்திருப்பீர்கள். ஆனால் இலங்கை ஸ்டைல் கத்திரிக்காய் கிரேவி ஒரு வித்தியாசமான அனுபவத்தை உங்களுக்கு கொடுக்கும். ஏனெனில் இது வித்தியாசமான செய்முறையுடன், சற்று காரமாகவும் இருக்கும். அதோடு இது சாதத்துடன் மட்டுமின்றி, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடவும் நன்றாக இருக்கும்.

கீழே இலங்கை ஸ்பெஷல் கத்திரிக்காய் கிரேவி எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பெரிய கத்திரிக்காய் - 1
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் (பொரிப்பதற்கு)
மசாலாவிற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 3
* கடுகு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 4 பல் (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - 1 இன்ச் (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 2 (நறுக்கியது)
* புளி பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* கெட்டியான தேங்காய் பால் - 200 மிலி
* தண்ணீர் - 250 மிலி
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.
* பின் கத்திரிக்காயை கழுவி, 2 இன்ச் நீளமுள்ள மெல்லியத் துண்டுகளாக வெட்டிக் கொண்டு, நிறம் மாறாமல் இருக்க உப்பு கலந்த நீரில் போட்டுக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் கத்திரிக்காயைப் போட்டு, சிறிது உப்பு தூவி, பொன்னிறமாக வறுத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு சேர்த்து தாளித்து, வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, பின் இஞ்சி, பூண்டு, வெங்காயத்தைப் போட்டு, வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
* பின் அதில் தக்காளியைப் போட்டு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து, தக்காளி மென்மையாக வேகும் வரை வதக்கவும்.
* அடுத்து அதில் உப்பு, கரம் மசாலா, புளி பேஸ்ட் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். இப்போது தேங்காய் பால் மற்றும் நீரை ஊற்றி, மூடி வைத்து, கெட்டியாகும் வரை நன்கு கொதிக்க வைத்து, உப்பு சுவை பார்த்து, வேண்டுமானால் உப்பு சேர்த்து கிளறி, இறுதியில் வறுத்து வைத்துள்ள கத்திரிக்கயை சேர்த்து 5 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான இலங்கை கத்திரிக்காய் கிரேவி தயார்.
Image Courtesy: archanaskitchen



Click it and Unblock the Notifications