Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
இலங்கை ஸ்டைல் சிக்கன் குழம்பு
உங்கள் வீட்டில் உள்ளோர் சிக்கன் கேட்கிறீர்களா? அப்படியானால் இலங்கை ஸ்டைல் சிக்கன் குழம்பு செய்யுங்கள். இந்த சிக்கன் குழம்பு சப்பாத்திக்கு மட்டுமின்றி, சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும்.
இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய போகிறீர்களா? அதற்கு சைடு டிஷ்ஷாக உங்கள் வீட்டில் உள்ளோர் சிக்கன் கேட்கிறீர்களா? அப்படியானால் எப்போதும் போன்று சிக்கன் கிரேவி செய்யாமல், இலங்கை ஸ்டைல் சிக்கன் குழம்பு செய்யுங்கள். இந்த சிக்கன் குழம்பு சப்பாத்திக்கு மட்டுமின்றி, சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். முக்கியமாக இந்த இலங்கை ஸ்டைல் சிக்கன் குழம்பு செய்வதற்கு வீட்டில் உள்ள பொருட்களே போதுமானது.

உங்களுக்கு இலங்கை ஸ்டைல் சிக்கன் குழம்பு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே இலங்கை ஸ்டைல் சிக்கன் குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* நெய்/வெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* ஏலக்காய் - 4
* வெந்தயம் - 1 டீஸ்பூன்
* பட்டை - 1 சிறிய துண்டு
* கறிவேப்பிலை - சிறிது
* வெங்காயம் - 5 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 2 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
* சோம்பு தூள் - 1 டீஸ்பூன்
* தக்காளி - 4 (பொடியாக நறுக்கியது)
* சிக்கன் - 1 கிலோ
* ரம்பை இலை - 1
* வினிகர் - 2 டேபிள் ஸ்பூன்
* கெட்டியான தேங்காய் பால் - 1 கப் / 250 மிலி
செய்முறை:
* முதலில் ஒரு அகலமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், பட்டை, ஏலக்காய், வெந்தயம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அடுத்து அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக சிறிது நேரம் வதக்கி, இஞ்சி, பூண்டு மற்றும் உப்பு தூவி நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் மசாலா பொடிகள் அனைத்தையும் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் அதில் தக்காளியை சேர்த்து 5 நிமிடம் நன்கு எண்ணெய் பிரிய வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் சிக்கனை கழுவிப் போட்டு நன்கு மசாலா சிக்கனில் ஒன்று சேரும் வரை கிளறி விட வேண்டும். சிக்கனில் மசாலா நன்கு ஒன்று சேர்ந்ததும், அதில் ரம்பை இலை, வினிகர் சேர்த்து கிளறி, மூடி வைத்து குறைவான தீயில் வைத்து, 40-45 நிமிடம் சிக்கனை வேக வைக்க வேண்டும்.
* சிக்கன் நன்கு வெந்ததும், அதில் தேங்காய் பாலை ஊற்றி கிளறி, 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், இலங்கை ஸ்டைல் சிக்கன் குழம்பு தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications

