Latest Updates
-
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகுது! -
புதன்-சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண யோகம்: இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
10 நிமிசத்தில் செய்யும் லெமன் அவல் உப்புமா ரெசிபி - செஞ்சு பாருங்க - சூப்பரா, ஆரோக்கியமா இருக்கும் -
லன்ச்பாக்ஸ்-க்கு இப்படி கேரட் ரைஸ் செஞ்சு குடுங்க - பிள்ளைங்க மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
இந்த 2 ராசிக்காரர்களுக்கு துளியும் நன்றியுணர்வு இருக்காதாம் - இவங்களுக்கு ஹெல்ப் பண்றதே வேஸ்ட் -
Aadi Pooram 2026: ஆடிப்பூரம் நாளில் என்னென்ன செய்யணும் தெரியுமா? -
இந்தியா-பாகிஸ்தான் எல்லையை வெறும் 5 வாரத்தில் உருவாக்கியவர் யார் தெரியுமா? நம்ப முடியாத இந்திய வரலாறு -
கடகத்தில் உச்சமடையும் குரு பகவான்: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களின் பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது! -
சூரியன் சொந்த நட்சத்திரத்திற்குள் நுழைவதால் வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - இப்படி செய்யுங்க.. தட்டு சோறு நொடியில் காலியாகும்..
இட்லி மாவுடன், 1 கப் கோதுமை மாவு சேர்த்து ஈவ்னிங் இப்படி போண்டா செய்யுங்க.. டேஸ்ட் அள்ளும்..
Spicy Wheat Bonda Recipe In Tamil: மாலை வேளையில் காபி, டீ குடிக்கும் போது ஒரு அருமையான மற்றும் மொறுமொறுப்பான ஸ்நாக்ஸ் செய்ய நினைக்கிறீர்களா? போண்டா, பஜ்ஜி செய்யலாம் என்றால் கடலை மாவு இல்லையா?
ஆனால் உங்கள் வீட்டில் இட்லி மாவு மற்றும் கோதுமை மாவு உள்ளதா? அப்படியானால் அவ்விரண்டையும் கொண்டு அட்டகாசமான சுவையில் ஒரு போண்டா செய்யுங்கள். இந்த போண்டா செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, சூப்பராகவும் இருக்கும்.

உங்களுக்கு கோதுமை கார போண்டாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கோதுமை கார போண்டா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வரமிளகாய் - 3
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* பூண்டு - 6 பல்
* இட்லி மாவு - 2 கப்
* கோதுமை மாவு - 1 கப்
* பெருங்காயத் தூள் - 2 சிட்டிகை
* உப்பு - சுவைக்கேற்ப
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து (பொடியாக நறுக்கியது)
* தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* சோடா உப்பு - 1 சிட்டிகை (விருப்பமிருந்தால்)
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் வரமிளகாயை சுடுநீரில் 5 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் ஊற வைத்த வரமிளகாய், சோம்பு, பூண்டு சேர்த்து
நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் இட்லி மாவு, கோதுமை மாவு, பெருங்காயத்
தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
* பிறகு அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, தேங்காய்
மற்றும் விருப்பமிருந்தால் சோடா உப்பு சேர்த்து நன்கு கட்டிகளின்றி,
போண்டா மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், கலந்து வைத்துள்ள மாவை கொஞ்சம்
கொஞ்சமாக எடுத்து எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுத்தால்,
சுவையான கோதுமை கார போண்டா தயார்.
Image Courtesy: kurinji. com



Click it and Unblock the Notifications