Latest Updates
-
பங்குனி மாத ராசி பலன் 2026: இந்த 5 ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகம் தேடி வரும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
அடுப்பில்லாம செய்யக்கூடிய அவல் பாயாசம் - செஃப் தீனா ஸ்டைலில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சனிக்கிழமையில் பிறந்தவர்களின் குணமும், எதிர்காலமும் எப்படி இருக்கும் தெரியுமா? -
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...!
இந்த தீபாவளிக்கு காரசாரமான மைதா பிஸ்கட் ரெசிபி செஞ்சு அசத்துங்க!!
காரசாரமான மைதா பிஸ்கட் ரெசிபி இந்தியாவில் புகழ்பெற்ற ஸ்நாக்ஸ் வகையாகும். இந்த ரெசிபி மகராஷ்டிராவில் இருந்து வந்தது. மேலும் இது நமக் பரா என்றும் அழைக்கப்படுகிறது.
காரசாரமான மைதா பிஸ்கட் ரெசிபி இந்தியாவில் புகழ்பெற்ற ஸ்நாக்ஸ் வகையாகும். இந்த ரெசிபி மகராஷ்டிராவில் இருந்து வந்தது. மேலும் இது நமக் பரா என்றும் அழைக்கப்படுகிறது. இதை மாலை நேர தேநீர் வேளைக்கும் பண்டிகை களின் போதும் அதிகமாக தயாரிப்பர்.
நல்ல காரசாரமான மாவை டைமண்ட் வடிவத்தில் செய்து எண்ணெயில் போட்டு மொறு மொறுவென பொரித்து செய்யும் ஸ்நாக்ஸ் ஆகும். இந்த கர சங்கரா போளியை அப்படியே மொறு மொறுப்பாக கடித்து கொண்டு கையில் சூடான டீயுடன் ஒரு சிப் பருகி கொண்டு உங்கள் மழைக்காலத்தை கழிக்கும் போது கிடைக்கும் சுவையே தனி தான்.
இந்த காரசாரமான மைதா பிஸ்கட்யை தயாரிப்பது எளிமையாக இருப்பதோடு குறைந்த நேரம் மட்டுமே ஆகும். பொரிப்பதற்கு மட்டுமே கொஞ்சம் கூடுதல் நேரம் எடுத்து கொள்ளும். மற்ற படி மிகவும் சுலபமான ரெசிபி ஆகும். நீங்கள் இதை வீட்டில் செய்ய நினைத்தால் பின்வரும் வீடியோ மற்றும் செய்முறை விளக்கத்தை காணுங்கள்.
காரசாரமான மைதா பிஸ்கட் வீடியோ ரெசிபி

Recipe By: காவ்யா ஸ்ரீ
Recipe Type: ஸ்நாக்ஸ்
Serves: 1 பெளல்
-
மைதா - 1/2 கப்
சிவப்பு மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - 6 டேபிள் ஸ்பூன் +பொரிப்பதற்கு
தண்ணீர் - 8 டேபிள் ஸ்பூன்
-
- மைதாவை ஒரு அகலமான பெளலில் எடுத்து கொள்ளவும்
- அதனுடன் சிவப்பு மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து கொள்ளவும்
- பிறகு அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் 6 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்
- சூடுபடுத்திய எண்ணெய்யை மாவுக் கலவையுடன் சேர்க்கவும்
- கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு மாவை மிதமான மென்மையான பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்
- இப்பொழுது 5 நிமிடங்கள் அப்படியே வைக்க வேண்டும்
- மாவை சரிசமமாக பிரித்து எடுத்து பந்து போல் உருண்டையாக உருட்டி கொள்ளுங்கள்
- பூரி பலகையில் வைத்து ரொட்டி மாதிரி தேய்த்து கொள்ளவும்
- இப்பொழுது ரொட்டியை செங்குத்தாக கோடுகளாக வெட்டவும். பிறகு சரிவாக வெட்டி டைமண்ட் வடிவ சிறிய துண்டுகளை பெறவும்.
- அடுப்பில் கடாயை வைத்து பொரிப்பதற்கு எண்ணெய்யை சூடுபடுத்த வேண்டும்.
- இப்பொழுது ஒவ்வொரு டைமண்ட்டாக ஒன்றன்பின் ஒன்றாக போட்டு பொரிக்க வேண்டும்
- மிதமான தீயில் பொன்னிறமாக மாறும் வரை பொரிக்க வேண்டும்
- பிறகு 5 நிமிடங்கள் ஆற வைத்து பரிமாறவும்
- 1. மாவை நன்றாக மென்மையாக அடித்து பிசைந்து கொண்டால் இன்னும் நன்றாக வரும்
- 2. மிதமான தீயில் வைத்து பொரித்தால் மைதா பிஸ்கட் கருகுவதை தடுக்கலாம்
- 3. இதை காற்று புகாத டப்பாக்களில் அடைத்து வைத்து சில வாரங்கள் கூட பயன்படுத்தி கொள்ளலாம்.
- பரிமாறும் அளவு - 1 கப்
- கலோரிகள் - 562 கலோரிகள்
- கொழுப்பு - 21 கிராம்
- புரோட்டீன் - 9.1 கிராம்
- கார்போஹைட்ரேட் - 81.3 கிராம்
- நார்ச்சத்து - 2.4 கிராம்
படத்துடன் செய்முறை விளக்கம் : காரசாரமான மைதா பிஸ்கட் செய்வது எப்படி
1. மைதாவை ஒரு அகலமான பெளலில் எடுத்து கொள்ளவும்
2. அதனுடன் சிவப்பு மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து கொள்ளவும்
3. பிறகு அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் 6 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்
4. சூடுபடுத்திய எண்ணெய்யை மாவுக் கலவையுடன் சேர்க்கவும்
5. கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு மாவை மிதமான மென்மையான பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்
6. இப்பொழுது 5 நிமிடங்கள் அப்படியே வைக்க வேண்டும்
7. மாவை சரிசமமாக பிரித்து எடுத்து பந்து போல் உருண்டையாக உருட்டி கொள்ளுங்கள்
8. பூரி பலகையில் வைத்து ரொட்டி மாதிரி தேய்த்து கொள்ளவும்
9. இப்பொழுது ரொட்டியை செங்குத்தாக கோடுகளாக வெட்டவும். பிறகு சரிவாக வெட்டி டைமண்ட் வடிவ சிறிய துண்டுகளை பெறவும்.
10. அடுப்பில் கடாயை வைத்து பொரிப்பதற்கு எண்ணெய்யை சூடுபடுத்த வேண்டும்.
11. இப்பொழுது ஒவ்வொரு டைமண்ட்டாக ஒன்றன்பின் ஒன்றாக போட்டு பொரிக்க வேண்டும்
12. மிதமான தீயில் பொன்னிறமாக மாறும் வரை பொரிக்க வேண்டும்
13. பிறகு 5 நிமிடங்கள் ஆற வைத்து பரிமாறவும்



Click it and Unblock the Notifications





























