Latest Updates
-
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்..
மணமணக்கும்... காரசாரமான... ரெட் சிக்கன் கிரேவி
Spicy Red Chicken Gravy: சிக்கன் பிரியர்களே! நீங்கள் அடிக்கடி வீட்டில் சிக்கனை சமைத்து சாப்பிடுவீர்களா? அதுவும் சிக்கனை நன்கு காரசாரமாக சமைத்து சாப்பிட பிடிக்குமா? அப்படியானால் நிச்சயம் உங்களுக்கு ரெட் சிக்கன் கிரேவி பிடிக்கும்.
இந்த ரெட் சிக்கன் கிரேவி சாதம், சப்பாத்தி, பூரி ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். இன்று இரவு உங்கள் வீட்டில் சிக்கன் செய்ய நினைத்தால், இந்த ரெட் சிக்கன் கிரேவி செய்யுங்கள். ஏனெனில் இது செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும்.

முக்கியமாக இது வேலை முடிந்து வீட்டிற்கு வந்ததும் செய்வதற்கு ஏற்ற வகையில் சுலபமான செய்முறையைக் கொண்டிருக்கும். உங்களுக்கு ரெட் சிக்கன் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?
கீழே ரெட் சிக்கன் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சிக்கன் - 1/2 கிலோ
* எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - ஒரு கையளவு
ஊற வைப்பதற்கு..
* கரம் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 2 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* தயிர் - 1 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
அரைப்பதற்கு...
* வரமிளகாய் - 10
* பூண்டு - 6-8 பல்
செய்முறை:
* முதலில் சிக்கனை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் கழுவிய சிக்கனை ஒரு பாத்திரத்தில் எடுத்து, அதில் கரம் மசாலா,
மிளகாய் தூள், மஞ்சள் தூள், சீரகத் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், தயிர்,
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு பிரட்டி, அதை குறைந்தது 30 நிமிடம்
ஊற வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் காஷ்மீரி வர மிளகாய் மற்றும் பூண்டு
சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், வெங்காயத்தை சேர்த்து, பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* பிறகு அதில் ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து, 5 நிமிடம் நன்கு வதக்க
வேண்டும்.
* பின் அதை மூடி வைத்து, குறைவான தீயில் வைத்து 25-30 நிமிடம் வேக
வைக்க வேண்டும்.
* சிக்கன் நன்கு வெந்ததும், மூடியைத் திறந்து, தீயை அதிகரித்து,
சிக்கனை நன்கு கிளற வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள மிளகாய் விழுதை சேர்த்து, 10
நிமிடம் நன்கு பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பின் கிரேவிக்கு தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து
கிரேவியை நன்கு கொதிக்க வைத்து இறக்கி, மேலே கொத்தமல்லியைத் தூவினால்,
சுவையான மற்றும் காரசாரமான ரெட் சிக்கன் கிரேவி தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications