Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
சன்டே ஸ்பெஷல்: காரசாரமான... மல்லூர் சிக்கன் வறுவல்
இந்த வார இறுதியில் உங்கள் வீட்டில் சிக்கன் செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? ஆனால் ஸ்பெஷலாக ஏதாவது உங்கள் வீட்டில் உள்ளோருக்கு செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் மல்லூர் சிக்கன் வறுவலை செய்து கொடுங்கள். சேலம் அருகில் மல்லூர் என்ற ஊர் உள்ளது. அந்த பகுதியில் மல்லூர் சிக்கன் வறுவல் மிகவும் பிரபலமானது. இந்த மல்லுர் சிக்கன் வறுவல் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.
உங்களுக்கு மல்லூர் சிக்கன் வறுவல் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மல்லூர் சிக்கன் வறுவல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
* சிக்கன் - 1/2 கிலோ
* பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* வரமிளகாய் - 10
* மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 2 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
* தேங்காய் பால் - 1/2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் சிக்கனை நன்கு கழுவி தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், சோம்பு, கறிவேப்பிலை, வெங்காயம், வரமிளகாய்
ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும்.
* பின்பு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் சிக்கனை சேர்த்து நன்கு கிளறி விட்டு, சிக்கனை 7
நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பின் அதில் மிளகுத் தூள், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி
விட வேண்டும்.
* பின்பு அதில் மல்லித் தூளை சேர்த்து நன்கு கிளறி, சிறிது நீரை
தெளித்து 3 நிமிடம் கிளறி விட வேண்டும்.
* இறுதியாக, அதில் சிறிது தேங்காய் பாலை ஊற்றி, 3 நிமிடம் கிளறி, மேலே
கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான மல்லூர் சிக்கன் வறுவல்
தயார்.
Image Courtesy: ChefDamusMulticuisine



Click it and Unblock the Notifications