Latest Updates
-
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமையா இருக்கும் -
வெயிலால் கருமையாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த முலாம் பழ ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
வெயிலின் தாக்கத்தை குறைக்க வாஸ்து செடிகளுக்கு மவுசு: மணி பிளாண்ட், அரேகா பாம் வாங்க மக்கள் ஆர்வம்
எப்பவும் ஒரே மாதிரி பொடிமாஸ் செய்யாம.. ஒருவாட்டி இப்படி செய்யுங்க.. டேஸ்ட் சும்மா வேற லெவல்-ல இருக்கும்...
Spicy Egg Podimas Recipe In Tamil: உங்கள் வீட்டில் தினமும் முட்டை செய்வீர்களா? அதுவும் அந்த முட்டையை பெரும்பாலும் பொடிமாஸ் செய்து தான் சாப்பிடுவீர்களா? எப்போதும் ஒரே மாதிரி முட்டை பொடிமாஸ் செய்வீர்களானால், அடுத்தமுறை சற்று வித்தியாசமான சுவையில், அதுவும் சற்று காரசாரமாக செய்து சாப்பிடுங்கள்.
இந்த காரமான முட்டை பொடிமாஸ் சப்பாத்தி, சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். மேலும் இந்த பொடிமாஸ் செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும். பேச்சுலர்கள் இந்த பொடிமாஸை ஒருமுறை செய்தால், அடிக்கடி செய்து சாப்பிடுவார்கள். அந்த அளவில் வாய்க்கு ருசியாகவும், செய்வதற்கு ஈஸியாகவும் இருக்கும்.

உங்களுக்கு காரசாரமான முட்டை பொடிமாஸை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே காரசாரமான முட்டை பொடிமாஸ் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சின்ன வெங்காயம் - 10
* பூண்டு - 10 பல்
* புளி - சிறிய துண்டு
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன்
* சோம்பு தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
பொடிமாஸ் செய்வதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* முட்டை - 5
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 4
* கறிவேப்பிலை - 1 கொத்து
* தண்ணீர் - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் சின்ன வெங்காயம், பூண்டு பற்கள், புளி,
மிளகாய் தூள், சீரகத் தூள், சோம்பு தூள், கரம் மசாலா சேர்த்து நன்கு
அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் 5 முட்டைகளை உடைத்து ஊற்றி,
சுவைக்கேற்ப உப்பு தூவி பொடிமாஸ் போன்று நன்கு கிளறி, முட்டை
வெந்ததும், ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய்,
கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி,
சுவைக்கேற்ப உப்பு தூவி பச்சை வாசனை நீங்கி நன்கு சுருள வதக்க
வேண்டும்.
* இறுதியாக அதில் முட்டை பொடிமாஸை சேர்த்து நன்கு மசாலா முட்டையுடன்
ஒன்று சேரும் வரை கிளறி இறக்கினால், சுவையான மற்றும் காரசாரமான முட்டை
பொடிமாஸ் தயார்.



Click it and Unblock the Notifications











