Latest Updates
-
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்..
சப்பாத்திக்கு சூப்பராக இருக்கும்.. குடைமிளகாய் மசாலா
உங்கள் வீட்டில் உள்ளோர் சப்பாத்திக்கு வித்தியாசமான சைடு டிஷ் கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் குடைமிளகாய் உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு ஒரு சுவையான குடைமிளகாய் மசாலாவை செய்யுங்கள்.
உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்யும் போது, அதற்கு எப்போதும் உருளைக்கிழங்கு மசாலா செய்து போரடித்துவிட்டதா? உங்கள் வீட்டில் உள்ளோர் வித்தியாசமான சைடு டிஷ் கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் குடைமிளகாய் உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு ஒரு சுவையான குடைமிளகாய் மசாலாவை செய்யுங்கள். இந்த குடைமிளகாய் மசாலா சப்பாத்திக்கு மட்டுமின்றி, பூரிக்கும் அட்டகாசமாக இருக்கும். மேலும் இதை செய்வதும் மிகவும் ஈஸி. குறிப்பாக இந்த குடைமிளகாய் மசாலா பேச்சுலர்கள் செய்யும் வகையில் செய்வதற்கு ஈஸியாக இருக்கும்.

உங்களுக்கு குடைமிளகாய் மசாலா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே குடைமிளகாய் மசாலாவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* குடைமிளகாய் - 1 (நறுக்கியது)
* வெங்காயம் - 1 1/2 கப் (நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 3 (நீளமாக கீறியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - 1/4 கப்
* தண்ணீர் - 1/2 கப்
* கொத்தமல்லி - சிறிது
அரைப்பதற்கு...
* தக்காளி - 3 (நறுக்கியது)
* முந்திரி - 6
* பட்டை - 1/4 இன்ச்
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் தக்காளி, முந்திரி, பட்டை, கிராம்பு ஆகியவற்றைப் போட்டு, நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயைப் போட்டு, நன்கு ஒரு 3 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின்பு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் மஞ்சள் தூள், மல்லித் தூள், மிளகாய் தூள், காஷ்மீரி மிளகாய் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, 5 நிமிடம் வதக்க வேண்டும்.
* மசாலா நன்கு வதங்கியதும், அரைத்த தக்காளி விழுதை ஊற்றி, சிறிது நீரை சேர்த்து, மூடி வைத்து, மிதமான தீயில் 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* அடுத்து குடைமிளகாயை சேர்த்து கிளறி 3 நிமிடம் வேக வைத்து இறக்கி, மேலே கொத்தமல்லியைத் தூவினால், சுவையான குடைமிளகாய் மசாலா தயார்.
Image Courtesy: spiceindiaonline



Click it and Unblock the Notifications