Latest Updates
-
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
1 கப் மீல் மேக்கர் இருந்தா.. இப்படி வெள்ளை சால்னா செய்யுங்க.. மட்டன் சால்னாவே தோத்துடும்...
Soya Vellai Salna Recipe In Tamil: புரட்டாசி வந்தாச்சு.. நிறைய பேர் வீட்டில் அசைவ உணவை ஒரு மாத காலம் சாப்பிடமாட்டார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் அசைவ உணவின் ஏக்கத்தைக் குறைக்க பலரும் அதற்கு இணையான சுவையுடைய சைவ உணவுகளை சமைத்து சாப்பிட நினைப்பார்கள். அப்படி அசைவ உணவுக்கு இணையான சுவையைத் தரும் உணவுகளுள் ஒன்று தான் மீல் மேக்கர்.
இந்த மீல் மேக்கரை பலவாறு சமைத்து சாப்பிடலாம். அதுவும் சப்பாத்தி, பூரி போன்றவற்றிற்கு மீல் மேக்கரை செய்வதாக இருந்தால், வழக்கமாக குருமா, கிரேவி என்று தான் செய்வீர்கள். ஆனால் ஒருமுறை வெள்ளை சால்னாவை செய்யுங்கள். இப்படி சால்னாவை செய்யும் போது, மட்டன் சால்னாவே தோற்றுப் போகும் அளவில் ருசி இருக்கும்.

உங்களுக்கு மீல் மேக்கர் வெள்ளை சால்னாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மீல் மேக்கர் வெள்ளை சால்னா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு...
* சின்ன வெங்காயம் - 15
* பச்சை மிளகாய் - 4
* பட்டை - 1 துண்டு
* கிராம்பு - 2
* கசகசா - 1 டீஸ்பூன்
* மிளகு - 1/4 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* பொட்டுக்கடலை - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* முந்திரி - 5
* தேங்காய் - 1/4 கப்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* அன்னாசிப்பூ - 1
* கிராம்பு - 2
* வெங்காயம் - 1
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* புதினா - சிறிது
* மீல் மேக்கர் - 1 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், பட்டை,
கிராம்பு, கசகசா, மிளகு, சீரகம், சோம்பு, பொட்டுக்கடலை, முந்திரி
மற்றும் தேங்காய் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் கொதிக்கும் நீரில் மீல் மேக்கரை சேர்த்து, 10 நிமிடம் ஊற
வைத்து, பின் நீரை வடிகட்டிவிட்டு, மீல் மேக்கரை கைகளால் பிழிந்து
தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி,
சூடானதும், பட்டை, அன்னாசிப்பூ, கிராம்பு சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு விழுதை
சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் சிறிது புதினா இலைகளை சேர்த்து வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் மீல் மேக்கரை சேர்த்து வதக்கி, அரைத்து வைத்துள்ள
தேங்காய் விழுதை சேர்த்து, சால்னாவிற்கு தேவையான அளவு நீரை ஊற்றி,
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளற வேண்டும்.
* இறுதியாக அதில் 1/4 டீஸ்பூன் மல்லித் தூள் மற்றும் 1/4 டீஸ்பூன்
கரம் மசாலா சேர்த்து கிளறி, குக்கரை மூடி 1 விசில் விட்டு இறக்கி,
விசில் போனதும் குக்கரைத் திறந்து கொத்தமல்லியைத் தூவினால், சுவையான
மீல் மேக்கர் வெள்ளை சால்னா தயார்.



Click it and Unblock the Notifications