Latest Updates
-
நாக பஞ்சமி 2026: இந்த வருட நாக பஞ்சமி எந்த நாளில் வருகிறது? இந்த நாளில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
வெஜ் கோலாப்பூரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு சூப்பரா இருக்கும் -
சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சுதந்திர தின ஸ்பெஷல் மூவர்ண பூரியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 15 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டத்தின் சாவி கைக்கு வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது! -
புதன் ஆயில்ய நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கும் யோகமுள்ள 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்தன்று இந்த ஸ்டைலில் வாழ்த்துக்களை சொல்லுங்க.. -
தேசியக்கொடியின் நடுவில் அசோக சக்கரம் ஏன் நீல நிறத்தில் உள்ளது? அதில் ஏன் 24 ஆரங்கள் உள்ளது தெரியுமா? -
ரோட்டுக்கடை இட்லி தக்காளி சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. அள்ளும்..
1 கப் மீல் மேக்கர் வெச்சு ஈவ்னிங் நேரத்துல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க..
Soya Nuggets Recipe In Tamil: மாலை வேளையில் உங்கள் வீட்டில் உள்ளோர் சாப்பிட ஸ்நாக்ஸ் ஏதாவது கேட்கிறார்களா? அதுவும் வழக்கமாக செய்வது போன்று பஜ்ஜி, போண்டா, வடை என்று எதுவும் செய்யாமல், சற்று வித்தியாசமான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்குமாறு கேட்கிறார்களா?
உங்கள் வீட்டில் மீல் மேக்கர் உள்ளதா? அப்படியானால் அந்த மீல் மேக்கரைக் கொண்டு நக்கட்ஸ் செய்து கொடுங்கள். இந்த மீல் மேக்கர் நக்கட்ஸ் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கேட்டு விரும்பி விரும்பி சாப்பிடுமாறு சுவையாக இருக்கும்.

உங்களுக்கு மீல் மேக்கர் நக்கட்ஸ் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மீல் மேக்கர் நக்கட்ஸ் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மீல் மேக்கர் - 1 கப்
* வேக வைத்த உருளைக்கிழங்கு - 3
* பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
* பூண்டு - 3 பல்
* இஞ்சி - 1 சிறிய துண்டு
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* சிக்கன் மசாலா - 1 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
* மைதா - 2 டீஸ்பூன்
* பிரட் - 5
* சீஸ்
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் சுடுநீரில் மீல் மேக்கரைப் போட்டு 10 நிமிடம் ஊற வைத்து,
அதிகப்படியான நீரைப் பிழிந்துவிட்டு, மிக்சர் ஜாரில் போட்டுக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் அத்துடன் வெங்காயம், பூண்டு, இஞ்சி ஆகியவற்றை சேர்த்து
நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்ததை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அத்துடன் வேக வைத்த உருளைக்கிழங்கு, மஞ்சள் தூள்,
சுவைக்கேற்ப உப்பு, சிக்கன் மசாலா, கொத்தமல்லி சேர்த்து நன்கு கைகளால்
பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பாத்திரத்தில் மைதா மாவை எடுத்து, நீர் ஊற்றி கரைத்துக்
கொள்ள வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் பிரட் துண்டுகளைப் போட்டு அரைத்து பொடி
செய்து, அதை ஒரு தட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் சீஸை எடுத்து அதை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள
வேண்டும்.
* அடுத்து பிசைந்து வைத்துள்ள கலவையை சிறிது எடுத்து, அதை உருட்டி
சற்று தட்டையாக தட்டி, அதன் நடுவே ஒரு சீஸ் துண்டை வைத்து மூடி, பின்
அதை மைதா கலவையில் பிரட்டி, அதன் பின் பிரட் தூளில் பிரட்டிக் கொள்ள
வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் பிரட் தூளில் பிரட்டியதைப்
போட்டு பொன்னிறமாக பொரித்துக் கொள்ள வேண்டும். இதேப் போல் அனைத்தையும்
பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான சோயா நக்கட்ஸ் தயார்.
Image Courtesy: cookd



Click it and Unblock the Notifications