Latest Updates
-
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்!
சப்பாத்தி, பூரிக்கு மீல்மேக்கரை வைச்சு இந்த மாதிரி கைமா செஞ்சு கொடுங்க... மட்டனை விட சூப்பரா இருக்கும்...!
Soya Keema Recipe in Tamil: இட்லி தோசைக்கு அடுத்தபடியாக பெரும்பாலான வீடுகளில் செய்யப்படும் டிபன் வகைகள் என்றால் அது சப்பாத்தி, பூரிதான். சப்பாத்தி மற்றும் பூரிக்கு பெரும்பாலும் குருமாதான் பிரதான சைடிஷாக இருக்கும், ஆனால் எவ்வளவு நாள்தான் குருமா வைத்தே சப்பாத்தி சாப்பிடுவது. சப்பாத்தி மற்றும் பூரிக்கு வழக்கமான கறுமை செய்யாமல் புதிதாக ஏதாவது கிரேவி செய்து கொடுத்தால் வீட்டில் அனைவரும் அதை விரும்பி சாப்பிடுவார்கள்.
அப்படி வித்தியாசமாக செய்து சாப்பிட ஒரு புதுமையான கிரேவிதான் கைமா கிரேவி. கைமா என்றால் சிக்கன் அல்லது மட்டனில்தான் செய்ய வேண்டுமென்ற அவசியமில்லை. புரதச்சத்துக்கள் நிறைந்த சோயாவிலும் சூப்பரான கைமா செய்யலாம். சிம்பிளாக உங்கள் பட்ஜெட்டிற்குள்ளேயே சோயாவை வைத்து சுவையாக கீமா கிரேவி செய்யலாம். இந்த பதிவில் மீல் மேக்கரை வைத்து சூப்பரான கைமா எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:
- சோயா - 100 கிராம்
- பச்சை பட்டாணி - 1 கப்
- பட்டை - 2
- கிராம்பு - 2
- ஏலக்காய் - 1
- பிரியாணி இலை - 1
- பெரிய வெங்காயம் - 2
- தக்காளி - 2
- இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
- சோம்பு - அரை ஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
- மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
- மல்லி தூள் - 1 டீஸ்பூன்
- கரம் மசாலா - 1 டீஸ்பூன்
- சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
- கொத்தமல்லி இலை - 1 கைப்பிடி
- வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
- உப்பு - 1 தேவையான அளவு
- தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
- முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் 100 கிராம் சோயாவை சேர்த்து தேவையான அளவு சுடு தண்ணீரை ஊற்றி நன்கு ஊற வைத்துக் கொள்ளுங்கள்.
- அது நன்கு ஊறியதும் பின்னர் அதில் இருக்கும் தண்ணீரை நன்கு பிழிந்து எடுத்து விட்டு ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளுங்கள்.
- அடுத்து அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் 1 கப் பச்சை பட்டாணியை சேர்த்து நன்கு வேக வைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு பெரிய வெங்காயம் மற்றும் தக்காளியை பொடிப்பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.
- பின்னர் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை மற்றும் சோம்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள்.
- பிறகு அதனுடனே பொடியாக நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயம் மற்றும் தக்காளி ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள். வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- பின்னர் அதனுடன் 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட், 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் மிளகாய் தூள், 1 டீஸ்பூன் மல்லி தூள், 1 டீஸ்பூன் கரம் மசாலா, சீரகத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள்.
- மசாலா பச்சை வாசனை போனதும் அதில் அரைத்து வைத்துள்ள சோயா மற்றும் வேக வைத்து எடுத்து வைத்திருந்த பச்சை பட்டாணியை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள்.
- பின்னர் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடுங்கள். இவை நன்கு கொதித்தவுடன் அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 1 டேபிள் ஸ்பூன் வெண்ணெய் மற்றும் பொடியாக நறுக்கிய 1 கைப்பிடி அளவு கொத்தமல்லி இலையை சேர்த்து இறக்கினால் சூப்பரான மற்றும் ஆரோக்கியமான சோயா கைமா ரெடி!



Click it and Unblock the Notifications