Latest Updates
-
12 ஆண்டுகள் கழித்து சிம்ம ராசியில் உருவாகும் குரு மங்கள யோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
நவராத்திரிக்கு பின் உருவாகும் இரட்டை ராஜயோகத்தால் ஜெயிக்கிற குதிரையாக போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
ஐயங்கார் ஸ்டைல் முருங்கைக்காய் ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - ஆரோக்கியமா சூப்பரா இருக்கும் -
வாஸ்துப்படி அதிர்ஷ்டத்தை ஈர்க்க இந்த ஓவியங்களை வாங்கி வீட்டுல வையுங்க.. பண கஷ்டமே வராது! -
ஆயுத பூஜைக்கு வாங்குன பொரியும், 2 முட்டையும் இருந்தா.. நைட் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. அள்ளும்.. -
Skin Care: இந்த பழங்களை அடிக்கடி சாப்பிடுவது அதிக முகப்பருக்களை ஏற்படுத்துமாம் - கவனமா சாப்பிடுங்க -
இந்த 4 ராசி ஆண்கள் 'ஒருவனுக்கு ஒருத்தி' என்று வாழும் நேர்மையான கணவராக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
அக்டோபர் 24-ல் வக்ரமடையும் புதன்: இந்த 5 ராசிக்காரங்க பேச்சால் பல பிரச்சனைகளை சந்திப்பாங்க.. உஷார்.. -
உங்கள் பழைய வெள்ளி நகைகளை செலவே இல்லாமல் வீட்டிலேயே புதிது போல மாற்றும் எளிய வழிகள் - ட்ரை பண்ணி பாருங்க -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரியுது சொல்லுங்க.. உங்கள பத்தி சொல்றோம்..
1 கப் மீல் மேக்கர் இருந்தா இந்த பக்குவத்தில் குருமா வையுங்க... சப்பாத்திக்கு மட்டன் குருமா மாதிரியே இருக்கும்!
Soya Gravy Recipe in Tamil: வழக்கமாக சப்பாத்தி மற்றும் பூரி போன்ற டிபன்களுக்கு குருமாதான் சிறந்த சைடிஷாக இருக்கும். சில சமயங்களில் சிக்கன் அல்லது மட்டன் வைத்து கூட சைடிஷ் செய்யலாம். ஆனால் எல்லா நேரத்திலும் இவற்றையே செய்து கொண்டிருக்க முடியாது. சில சமயங்களில் புதிய சைடிஸ்களை முயற்சித்து பார்க்க வேண்டும்.
புதிய சைடிஷ் என்று வரும்போது அதை மீல்மேக்கரை வைத்து முயற்சிக்கலாம். சரியான பக்குவத்தில் செய்தால் மீல் மேக்கரையே அசைவ உணவுகளை விட அட்டகாசமான சுவையில் செய்யலாம். மேலும் மீல் மேக்கரில் புரதச்சத்து நிறைந்துள்ளதால் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கும், உடலை வலிமையாக்க விரும்புபவர்களுக்கும் இது சிறந்த உணவாக இருக்கும்.

உங்களுக்கு மீல் மேக்கரை வைத்து அட்டகாசமான சுவையில் சப்பாத்தி, பூரிக்கு சைடிஷ் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மீல் மேக்கர் கிரேவியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையானப் பொருட்கள்:
மீல் மேக்கரை வேக வைக்க:
- 1 கப் மீல் மேக்கர்
- 1 ஸ்பூன் உப்பு
- வேகவைக்க தண்ணீர்
மேரினேட் செய்ய:
- ½ ஸ்பூன் மஞ்சள்
- ½ ஸ்பூன் மிளகாய் தூள்
- ½ ஸ்பூன் கொத்தமல்லி தூள்
- ¼ ஸ்பூன் சீரக தூள்
- 1 ஸ்பூன் கசூரி மேத்தி
- 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- அரை கப் தயிர்
தாளிக்க:
- 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
- 1 டேபிள் ஸ்பூன் சீரகம்
- 1 சிட்டிகை பெருங்காயம்
- 5 பல் பூண்டு, பொடியாக நறுக்கியது
- 1 பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கியது
- ½ டேபிள் ஸ்பூன் மஞ்சள்தூள்
- 1 டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள்
- ½ டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி தூள்
- ½ டேபிள் ஸ்பூன் சீரகத்தூள்
- ½ டேபிள் ஸ்பூன் கரம் மசாலா
- தேவையான அளவு உப்பு
- 1 கப் அரைத்த தக்காளி
- 1 கப் தண்ணீர்
- ஒரு கைப்பிடி நறுக்கிய கொத்தமல்லி
- 2 டேபிள்ஸ்பூன் கசூரி மேத்தி
செய்முறை:
- முதலில், ஒரு பாத்திரத்தில் போதுமான அளவு தண்ணீர் எடுத்து 1 ஸ்பூன் உப்பு சேர்க்கவும். தண்ணீர் கொதித்ததும், 1 கப் சோயா துண்டுகளைச் சேர்க்கவும்
- மீல் மேக்கர் நன்றாக வேகும் வரை வேகவைக்கவும்.
- சோயாவை வடிகட்டி தண்ணீரை பிழிந்து விடுங்கள். இது சோயா துண்டுகள் மேரினேட் செய்யும் போது மசாலாவை உறிஞ்ச உதவும்.
- வேகவைத்த சோயாவை பெரிய கிண்ணத்திற்கு மாற்றவும்.
- பின்னர் அதில் ½ டேபிள் ஸ்பூன் மஞ்சள், ½ டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள், ½ டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி தூள், ¼ டேபிள் ஸ்பூன் சீரகத் தூள், 1 ஸ்பூன் கசூரி மேத்தி, 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது மற்றும் அரை கப் தயிர் சேர்க்கவும்.
- எல்லாம் நன்றாகக் கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
- ஒரு கடாயில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெயை ஊற்றி சூடாக்கி, 1 டேபிள் ஸ்பூன் சீரகம், ஒரு சிட்டிகை பெருங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து, நறுக்கியாய் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- அடுப்பை மிதமான தீயில் குறைத்து, ½ டீஸ்பூன் மஞ்சள், 1 டீஸ்பூன் மிளகாய்த் தூள், ½ டீஸ்பூன் கொத்தமல்லித் தூள், ½ டீஸ்பூன் சீரகத் தூள், ½ டீஸ்பூன் கரம் மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
- மசாலா பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.
- பின்னர் மேரினேட் செய்யப்பட்ட சோயாவைச் சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் 1 கப் அரைத்த தக்காளி சேர்த்து கிளறவும்.
- மேலும், 1 கப் தண்ணீர் சேர்த்து, கிரேவியின் அளவு மற்றும் சுவையை சரிபார்த்து கொதிக்க வைக்கவும்.
- பின்னர் மூடி வைத்து 10 நிமிடங்கள் மிதமான தீயில் வேக வைக்கவும்.
- இறுதியாக ஒரு கைப்பிடி கொத்தமல்லி, 2 டேபிள்ஸ்பூன் கசூரி மேத்தியைச் சேர்த்து நன்கு கலக்கவும்.
- அவ்வளவுதான் சுவையான சோயா கிரேவி ரெடி. இது சப்பாத்தி, தோசை மட்டுமின்றி சாதத்துடன் சாப்பிடவும் அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
