Latest Updates
-
இன்றைய ராசிபலன் 27 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
கும்ப ராசியில் நிகழும் சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு மோசமா இருக்கும்.. உஷார்.. -
செப்டம்பரில் நிகழும் செவ்வாய்-குருபகவானின் அரிய சேர்க்கையால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் -
வெண்டைக்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செய்யுங்க - டேஸ்ட் தரமா இருக்கும் -
1 வாரமானாலும் கொத்தமல்லி கெட்டுபோகக் கூடாதா? அப்ப இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க.. -
குழந்தை பெற்றுக்கொள்ள 52 லட்சம் போனஸ் கொடுக்கும் நாடு - எந்த நாடு? ஏன் கொடுக்கிறது தெரியுமா? -
மகம் நட்சத்திரத்தில் 3 கிரகங்களின் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்! -
பாவக்காயை இப்படி பொரியல் செய்யுங்க.. கசப்பே இருக்காது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க.. -
புதன் கன்னி ராசிக்கு செல்வதால் சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கும் அமைச்சர் செங்கோட்டையன்! இதன் ஆரோக்கிய நன்மைகளை பட்டியலிடும் டாக்டர்!
மீல் மேக்கர் சால்னா
பொதுவாக மீல் மேக்கரை பிரியாணியில் தான் சுவைத்திருப்பீர்கள். ஆனால் மீல் மேக்கரைக் கொண்டு சப்பாத்தி, சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடும் அளவில் ருசியான சால்னா செய்யலாம்.
பொதுவாக மீல் மேக்கரை பிரியாணியில் தான் சுவைத்திருப்பீர்கள். ஆனால் மீல் மேக்கரைக் கொண்டு சப்பாத்தி, சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடும் அளவில் ருசியான சால்னா செய்யலாம். இந்த மீல் மேக்கர் சால்னா செய்வது மிகவும் சுலபம். அதோடு, இது அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும். குறிப்பாக இது அவசர நேரத்தில் செய்ய ஏற்றது.

உங்களுக்கு மீல் மேக்கர் சால்னா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மீல் மேக்கர் சால்னா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
* தக்காளி - 1 (நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (நீளமாக கீறியது)
* இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
* கறி மசாலா பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* மீல் மேக்கர் - 2-3 கப்
வதக்கி அரைப்பதற்கு...
* தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
* தக்காளி - 1 (நறுக்கியது)
* தேங்காய் - 1 கப் (துருவியது)
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, பட்டை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வெங்காயம், தக்காளி சேர்த்து ஒரு நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் தேங்காய் சேர்த்து 5 நிமிடம் வதக்கி இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, நீர் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் மீல் மேக்கரை சேர்த்து அடுப்பை அணைத்துவிட்டு, மூடியால் பாத்திரத்தை 15-20 நிமிடம் மூடி வைத்து, பின் நீரை வடிகட்டிவிட்டு, மீல் மேக்கரில் உள்ள நீரை பிழிந்துவிட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* பின் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் கறி மசாலா பவுடர், மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி, பின் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கிளறி விட வேண்டும்.
* பின்பு மீல் மேக்கரை சேர்த்து கிளறி, தேவையான அளவு நீரை ஊற்றி நன்கு பத்து நிமிடம் குறைவான தீயில் மூடி வைத்து கொதிக்க விட்டு இறக்கினால், சுவையான மீல் மேக்கர் சால்னா தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications