Latest Updates
-
பச்சை பயறு தோசையும், இஞ்சி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 27 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
கும்ப ராசியில் நிகழும் சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு மோசமா இருக்கும்.. உஷார்.. -
செவ்வாய்-குருபகவானின் அரிய சேர்க்கை இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அற்புதங்கள் நிகழப்போகுதாம் -
வெண்டைக்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செய்யுங்க - டேஸ்ட் தரமா இருக்கும் -
1 வாரமானாலும் கொத்தமல்லி கெட்டுபோகக் கூடாதா? அப்ப இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க.. -
குழந்தை பெற்றுக்கொள்ள 52 லட்சம் போனஸ் கொடுக்கும் நாடு - எந்த நாடு? ஏன் கொடுக்கிறது தெரியுமா? -
மகம் நட்சத்திரத்தில் 3 கிரகங்களின் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்! -
பாவக்காயை இப்படி பொரியல் செய்யுங்க.. கசப்பே இருக்காது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க.. -
புதன் கன்னி ராசிக்கு செல்வதால் சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
மீல் மேக்கர் 65
மாலையில் வீட்டில் உள்ளோருக்கு வித்தியாசமாக ஏதேனும் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் மீல் மேக்கர் உள்ளதா? அப்படியானால் அந்த மீல் மேக்கரைக் கொண்டு ஒரு அட்டகாசமான சுவையில் மீல் மேக்கர் 65 செய்து கொடுங்கள்.
மாலை வேளையில் உங்கள் வீட்டில் உள்ளோர் காபி, டீ குடிக்கும் போது மொறுமொறுப்பாக சாப்பிட கேட்கிறார்களா? நீங்கள் அவர்களுக்கு வித்தியாசமாக ஏதேனும் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் மீல் மேக்கர் உள்ளதா? அப்படியானால் அந்த மீல் மேக்கரைக் கொண்டு ஒரு அட்டகாசமான சுவையில் மீல் மேக்கர் 65 செய்து கொடுங்கள். மீல் மேக்கர் 65 ஒரு எளிமையான ஸ்நாக்ஸ்.

உங்களுக்கு மீல் மேக்கர் 65 எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மீல் மேக்கர் 65 ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மீல் மேக்கர் - 1/2 கப்
* இஞ்சி பூண்டு விழுது - 1 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 1/4 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
* மைதா - 1 டேபிள் ஸ்பூன்
* சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன்
* கேசரி பவுடர் - 1 சிட்டிகை
* தயிர் - 1 டேபிள் ஸ்பூன்
* எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் மீல் மேக்கரை கொதிக்கும் நீரில் போட்டு 2 நிமிடம் வேக வைத்து, பின் அந்நீரை வடிகட்டிவிட்டு, குளிர்ந்த நீரில் இரண்டு முறை அலசி, எஞ்சியுள்ள நீரை பிழிந்துவிட வேண்டும்.
* பின்பு ஒரு பௌலில் தயிர், எலுமிச்சை சாறு, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், கேசரி பவுடர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பிறகு அதில் மீல் மேக்கர், பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு நன்கு பிரட்டி, 30 நிமிடம் முதல் ஒரு மணிநேரம் வரை ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் அதில் சோள மாவு மற்றும் மைதா சேர்த்து நன்கு பிரட்டி கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், மீல் மேக்கர் துண்டுகளைப் போட்டு பொரித்து எடுத்தால், சுவையான மற்றும் மொறுமொறுப்பான மீல் மேக்கர் 65 தயார்.
Image Courtesy: naliniscooking



Click it and Unblock the Notifications