Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
ருசியான... சோயா பீன்ஸ் கிரேவி செய்வது எப்படி?
சோயா பீன்ஸ் கிரேவி சப்பாத்திக்கு மட்டுமின்றி, சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். முக்கியமாக இந்த சோயா பீன்ஸ் கிரேவி செய்வது மிகவும் சுலபம். பத்தே நிமிடத்தில் இதை செய்துவிடலாம்.
பெரும்பாலானோர் இரவு நேரத்தில் சப்பாத்தி சாப்பிட விரும்புவார்கள். இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய திட்டமிட்டிருக்கிறீர்களா? அந்த சப்பாத்திக்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் சோயாபீன்ஸ் உள்ளதா? அப்படியானால் அதை இப்போதே நீரில் ஊற வையுங்கள். ஏனெனில் சோயா பீன்ஸை இப்போது ஊற வைத்தான் தான் இரவு உங்களால் அதைக் கொண்டு கிரேவி செய்ய முடியும். இந்த சோயா பீன்ஸ் கிரேவி சப்பாத்திக்கு மட்டுமின்றி, சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். முக்கியமாக இந்த சோயா பீன்ஸ் கிரேவி செய்வது மிகவும் சுலபம். பத்தே நிமிடத்தில் இதை செய்துவிடலாம்.

உங்களுக்கு சோயா பீன்ஸ் கிரேவி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சோயா பீன்ஸ் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* காய்ந்த சோயா பீன்ஸ் - 1 கப்
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 1/2 டீஸ்பூன்
* பூண்டு - 4 பல்
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் சோயா பீன்ஸை நீரில் 7-8 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பின் அந்நீரை வடிகட்டிவிட்டு, சோயா பீன்ஸை குக்கரில் போட்டு, போதுமான அளவு நீரை ஊற்றி, அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். விசில் போனதும், குக்கரைத் திறக்க வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகத்தை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பூண்டு பற்களைத் தட்டிப் போட்டு 1 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின்பு அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து சிறிது நேரம் கிளறி விட வேண்டும்.
* பிறகு அதில் வேக வைத்துள்ள சோயா பீன்ஸை நீருடன் சேர்த்து, சோயா பீன்ஸை லேசாக மசித்து விட்டு கிளறி, சிறிது உப்பு சேர்த்து மிதமான தீயில் வைத்து சற்று கெட்டியாகும் வரை கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.
* இறுதியாக அதில் கொத்தமல்லியைத் தூவினால், சுவையான சோயா பீன்ஸ் கிரேவி தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications