தீபாவளிக்கான ஒரு வித்தியாசமான வறுத்த குடைமிளகாய் சூப்

Posted By: Staff
Subscribe to Boldsky

தீபாவளிக்கு ஒரு முழுமையான உணவை தயாரிக்கும் முன், பசியைத் தூண்டும் ஒரு சுவையான பதார்த்தத்தை தயாரிக்கலாம் அல்லவா? உங்களின் பசியைத் தூண்டும் விஷயத்தில் சூப்களை அடித்துக் கொள்ள முடியாது.

தீபாவளி அன்று, நீங்கள் செய்ய வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கும் இல்லையா? அதைச் செய்து முடிக்க நீங்கள் ஓடி ஆடி களைத்து போயிருப்பீர்கள். அப்பொழுது நீங்கள் சூப்களை குடித்து உங்கள் உடலின் நீர்த்தேவையை அதிகரிக்க முடியும். அதோடு மட்டுமல்ல சூப்கள் உங்களின் உடல் ஆற்றலை திரும்ப மீட்டுத் தரும். நீங்கள் மிகவும் சுறுசுறுப்பாக உணர்வீர்கள்.

Roasted Capsicum Soup For Diwali

அதன் காரணமாக நங்கள் ஒரு வித்தியாசமான ஒரு சூப் ஒன்றின் செயல்முறை விளக்கத்தை உங்களுக்காக வழங்குகின்றோம். அதாவது நாங்கள் ஒரு வறுத்த குடைமிளகாய் சூப் செயல்முறை விளக்கத்தை இங்கே கொடுத்துள்ளோம்.

நீங்கள் பச்சை குடமிளகாய், சிவப்பு அல்லது மஞ்சள் நிற குடமிளகாய்களைப் பயன்படுத்தி இந்த சூப்பை செய்து பார்க்கலாம். ஒவ்வொரு வகை குடமிளகாயும் வெவ்வேறு சுவை மற்றும் நறுமணத்தைக் கொடுக்கும். இங்கே வறுத்த குடமிளகாய் சூப்பிற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிய செய்முறை குறிப்புகளைக் கொடுத்துள்ளோம். அதைப் பற்றி தெரிந்து கொள்ள மேலே தொடர்ந்து படியுங்கள்.

பறிமாறும் அளவு - 4 பேர்

தயாரிப்பு நேரம் - 10 நிமிடங்கள்

சமையல் நேரம் - 30 நிமிடங்கள்

தேவையான பொருட்கள்:

1. சிவப்பு குட மிளகாய் - 2

2. எண்ணெய் - 1 டீஸ்பூன்

3. தக்காளி - 4 (பகுதிகளாக வெட்டியது)

4. பூண்டு - 1 பல்

5. பிரியாணி இலைகள் - 2

6. தண்ணீர் - 3 கப்

7. குறைந்த கொழுப்புள்ள பால் - ½ கப்

8. சோள மாவு - 1½ தேக்கரண்டி

9. உப்பு - சுவைக்குத் தேவையான அளவு

10. சர்க்கரை - ஒரு சிட்டிகை (தேவைப்பட்டால்)

11. கருப்பு மிளகு - அழகுப்படுத்துவதற்காக ஒரு சிட்டிகை (தேவைப்பட்டால்)

செயல்முறை:

1. புதிய மற்றும் முழுமையான குடமிளகாயை எடுத்து அதன் மீது எண்ணெய்யை தடவுங்கள்.

2. இப்போது, அதை ஒரு குச்சியில் குத்தி உங்களின் எரிவாயு அடுப்பில் நன்றாக சுட்டு எடுங்கள்.

3. குடமிளகாய் வெளியில் இருந்து கருப்பு நிறமாக மாறும் வரை, குடமிளகாயை சுடுங்கள்.

4. இப்போது, ஒரு கிண்ணத்தில் தண்ணீர் எடுத்து அதில் சுட்ட குடமிளகாயை அழுத்தி, கருப்பு நிற பாகங்களை உங்களின் கைகளால் நீக்குங்கள்.

5. நன்றாக கழுவி முடித்த குடமிளகாயை எடுத்து, அதை நீள வாக்கில் வெட்டி, அதிலுள்ள விதைகளை நீக்குங்கள். அதன் பின்னர் அதை நறுக்கி எடுத்துக் கொள்ளுங்கள். அதைப் பொடியாக நறுக்கத் தேவையில்லை. ஏனெனில் அதை நீங்கள் நன்றாக அரைக்கப் போகின்றீர்கள்.

6. ஒரு ஆழமான அடிப்பாகமுடைய கடாயை எடுத்து அதில் ஒரு பழுத்த மற்றும் சிவந்த நிறமுடைய தக்காளியைச் சேர்க்கவும்.

7. உங்களுக்கு பூண்டு வாசனை பிடிக்கும் எனில், பூண்டை சேர்க்கவும்; இல்லையெனில் தவிர்த்து விடவும்.

8. இப்போது, பிரியாணி இலையை சேர்க்கவும். அதனுடன் நீர் மற்றும் குட மிளகாய் துண்டுகளைச் சேர்க்கவும். இந்தக் கலவையை நன்கு கொதிக்க விடவும்.

9. கலவை நன்கு வெந்த பின்னர் அடுப்பை அணைத்து விடவும். கலவை அறை வெப்பநிலைக்கு வரும் வரை காத்திருக்கவும்.

10. கலவை நன்கு குளிர்ந்த பின்னர், அதை ஒரு மிக்ஸியில் போடவும்.

11. மிக்ஸியின் மேல் மட்டம் வரை கலவையை நிரப்ப வேண்டாம். கலவையின் அளவு அதிகமாக இருந்தால், அதை தனித் தனியாக அரைத்து எடுத்துக் கொள்ளலாம். இப்போது, நன்றாக அரைத்த கலவையை ஒரு கிண்ணத்தில் ஊற்றவும்.

12. ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதை சூடுபடுத்தவும். அதில் அரைத்த கலவையை ஊற்றவும். கலவை நன்கு கொதிக்கும் வரை நீங்கள் பால் மற்றும் சோள மாவு கலவையை தயார் செய்யலாம்.

13. குளிர்ந்த பாலை எடுத்து அதில் சோள மாவை சேர்க்கவும். பாலை நன்றாக கலந்து மெதுவாக சூப்பில் ஊற்றவும்.

14. கலவையை தொடர்ந்து கலக்கவும். இல்லையெனில் சோள மாவு ஒட்டும் பதத்திற்கு வந்து விடும்.

15. சூப்பை சிறிது எடுத்து ருசி பார்க்கவும். சூப் புளிப்பாக இருந்தால் அதில் ஒரு சிட்டிகை சக்கரையைச் சேர்க்கவும்.

16. சூப்பை சிறிது நேரம் கொதிக்க விடவும். உங்களுக்கு சூப் சரியான பதத்திற்கு வந்து விட்டது எனத் தெரியும் வரை சூப்பை கொதிக்க விடவும். அதன் பின்னர் சூப்பை கிண்ணத்தில் ஊற்றவும்.

17. தற்பொழுது உங்களின் வறுத்த குட மிளகாய் சூப் தயாராக உள்ளது. அதில் நீங்கள் கருப்பு மிளகு சேர்த்து அழகுபடுத்தி பரிமாறவும்.

எனவே, வருகின்ற தீபாவளிக்கு இந்த வறுத்த குடமிளகாய் சூப் செய்முறையை முயற்சி செய்து பார்த்து உங்களின் குடும்ப உறுப்பினர்களை அசத்துங்கள். அவர்கள் இந்த சூப்பை எவ்வாறு ரசித்தார்கள் என்பதை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

Read more about: soup, snacks, சூப்
English summary

Roasted Capsicum Soup For Diwali

Roasted Capsicum Soup For Diwali
Story first published: Tuesday, October 25, 2016, 13:05 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter