Latest Updates
-
ஆயுத பூஜைக்கு வாங்குன பொரியும், 2 முட்டையும் இருந்தா.. நைட் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. அள்ளும்.. -
Skin Care: இந்த பழங்களை அடிக்கடி சாப்பிடுவது அதிக முகப்பருக்களை ஏற்படுத்துமாம் - கவனமா சாப்பிடுங்க -
இந்த 4 ராசி ஆண்கள் 'ஒருவனுக்கு ஒருத்தி' என்று வாழும் நேர்மையான கணவராக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
அக்டோபர் 24-ல் வக்ரமடையும் புதன்: இந்த 5 ராசிக்காரங்க பேச்சால் பல பிரச்சனைகளை சந்திப்பாங்க.. உஷார்.. -
உங்கள் பழைய வெள்ளி நகைகளை செலவே இல்லாமல் வீட்டிலேயே புதிது போல மாற்றும் எளிய வழிகள் - ட்ரை பண்ணி பாருங்க -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரியுது சொல்லுங்க.. உங்கள பத்தி சொல்றோம்.. -
இராவணனுக்கு 10 தலைகள் கிடைத்ததற்கு பின்னால் உள்ள கதை என்ன தெரியுமா? அந்த 10 தலைகளின் அர்த்தம் என்ன தெரியுமா? -
3/4 கிலோ சிக்கன் வாங்குனா.. இப்படி கெட்டி குழம்பு செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
பொரி மிச்சமிருந்தா இந்த மாதிரி மொறுமொறுனு வடை சுடுங்க - டீ, காபியோட சாப்பிட சூப்பரா இருக்கும் -
லென்ஸ் போட்டிருக்கீங்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க.. பார்வைக்கே ஆபத்தாயிடும் - எச்சரிக்கும் கண் டாக்டர்!
மொறுமொறுப்பான கத்திரிக்காய் பஜ்ஜி
இதுவரை கத்திரிக்காய் கொண்டு வறுவல், சாம்பார், பொரியல் செய்து தான் சுவைத்திருப்பீர்கள். ஆனால் மாலையில் சாப்பிடுமாறு பஜ்ஜி செய்து சுவைத்ததுண்டா? ஆம், கத்திரிக்காய் கொண்டு பஜ்ஜி செய்தால், அதன் சுவை வித்தியாசமாக இருக்கும். மேலும் பசியுடன் இருக்கும் குழந்தைகளுக்கு அற்புதமான ஸ்நாக்ஸாகவும் இருக்கும்.
சரி, இப்போது அந்த கத்திரிக்காய் பஜ்ஜியை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
கத்திரிக்காய் - 1/2 கிலோ (சிறியது)
கடலை மாவு - 2 கப்
வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
மிளகாய் - 8 (பொடியாக நறுக்கியது)
சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
சமையல் சோடா - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - 1/2 கப்
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
ஓமம் - 1/2 டீஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு கடாயில் வெங்காயம், தக்காளி, மிளகாய், கொத்தமல்லி, சீரகப் பொடி மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி, 5 நிமிடம் மூடி வைத்து வேக வைக்கவும்.
பின் அதனை இறக்கி குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு கத்திரிக்காயை நீரில் கழுவி, அதனை மலர் விரிவது போன்று நான்காக வெட்டிக் கொள்ளவும்.
பின் அதன் நடுவே அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை வைத்துக் கொள்ளவும்.
பின்பு ஒரு பௌலில் கடலை மாவு, உப்பு, மிளகாய் தூள், சமையல் சோடா, ஓமம் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி ஓரளவு கெட்டியாக பேஸ்ட் செய்து கொள்ளவும்.
அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அனைத்து கத்திரிக்காய்களையும் போட்டு 5 நிமிடம் குறைவான தீயில் கிளறி இறக்கி, தனியாக வைத்துக் கொள்ளவும்.
இறுதியில் அதே வாணலியில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்றி, பின் ஒவ்வொரு கத்திரிக்காயையும் கடலை மாவில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால், கத்திரிக்காய் பஜ்ஜி ரெடி!!!



Click it and Unblock the Notifications
