Just In
- 1 hr ago
இந்தியாவின் பெருமை என்று நீங்கள் நினைக்கும் இந்த விஷயங்கள் வெறும் கட்டுக்கதைகள்தானாம் தெரியுமா?
- 2 hrs ago
ஆரோக்கியமான இதயத்திற்கு இந்த 5 யோகா முத்திரை ஆசனங்களை தினமும் செய்யுங்க போதும்…
- 2 hrs ago
உலகில் அழகான பெண்களை கொண்ட நாடுகள் எது தெரியுமா? இந்தியாவிற்கு எத்தனையாவது இடம் தெரியுமா?
- 4 hrs ago
பண்டைய இந்தியாவில் பாலியல் தொழிலில் நடத்தப்பட்ட கொடுமைகள் என்ன தெரியுமா?
Don't Miss
- News
திருமலை: மலையப்ப சுவாமி சிலையில் சேதம்... ஆர்ஜித சேவைகள் நிறுத்தப்படுமா
- Automobiles
அதிரடி சலுகைகளை டிசம்பர் மாதத்திற்கும் நீட்டித்துள்ள ஹோண்டா நிறுவனம்...
- Movies
ஜெயிக்கணும்னா... வில்லத்தன சுதீப்புக்கு வெறித்தென வசனம் எழுதிய ஹீரோ!
- Finance
விர்ரென்று ஏறிய தங்கம் விலை.. ஒரே வாரத்தில் சவரனுக்கு 350 ரூபாய் அதிகரிப்பு.. விலை குறையுமா..!
- Technology
பட்ஜெட் விலையில் நோக்கியா டிவி அறிமுகம்- எத்தனை அம்சங்கள் தெரியுமா?
- Sports
பாக்கெட்டில் 399 சிக்சர்கள்.. ஒன்னு அடிச்சா போதும்.. 400.. சாதனைக்காக காத்திருக்கும் ரோஹித் சர்மா
- Education
12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசு வேலை- எஸ்எஸ்சி புதிய அறிவிப்பு!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மொறுமொறுப்பான... பிரட் பஜ்ஜி
மாலையில் மொறுமொறுப்பாகவும், வித்தியாசமாகவும் ஏதேனும் செய்து சுவைக்க நினைத்து, வீட்டில் பிரட் இருந்தால், அதைக் கொண்டு பஜ்ஜி செய்து சுவையுங்கள். இது அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.
சரி, இப்போது அந்த பிரட் பஜ்ஜியை எப்படி எளிய முறையில் செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 1/2 கப்
கடலை மாவு - 1/4 கப்
அரிசி மாவு - 1/4 கப்
பேக்கிங் சோடா - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
ஓமம் - 1 டீஸ்பூன்
சாட் மசாலா - 3/4 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு
பிரட் துண்டுகள் - 4-5
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
முதலில் பிரட்டை சதுர துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
அதற்குள் ஒரு பாத்திரத்தில் பிரட் மற்றும் எண்ணெயைத் தவிர, அனைத்து பொருட்களையும் போட்டு தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
பின் ஒவ்வொரு பிரட் துண்டுகளையும் பஜ்ஜி மாவில் பிரட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், பிரட் பஜ்ஜி ரெடி!!!
Image Courtesy: yummytummyaarthi