For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புடலங்காய் பஜ்ஜி

By Maha
|

பொதுவாக புடலங்காயை கூட்டு, பொரியல் என்று தான் செய்து சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் குளிர்காலத்தில் மாலை வேளையில் டீ/காபி குடிக்கும் போது இதமாக ஏதேனும் மொறுமொறுவென்று சாப்பிட நினைத்தால், புடலங்காயை பஜ்ஜி செய்து சாப்பிடலாம். இது உண்மையிலேயே வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.

மேலும் வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். சரி, இப்போது புடலங்காய் பஜ்ஜியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Crispy Snake Gourd Bajji Recipe

தேவையான பொருட்கள்:

புடலங்காய் - 1
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

பஜ்ஜி மாவிற்கு...

கடலை மாவு - 1 கப்
அரிசி மாவு - 1/2 கப்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் புடலங்காயின் தோலை நீக்கிவிட்டு, அதனை வட்ட வட்டமாக வெட்டி, அதனுள் உள்ள விதைகளை நீக்கி விட வேண்டும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் பஜ்ஜி மாவிற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து, பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், புடலங்காயை பஜ்ஜி மாவில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், புடலங்காய் பஜ்ஜி ரெடி!!!

Image Courtesy: yummytummyaarthi

English summary

Crispy Snake Gourd Bajji Recipe

Want to know how to prepare snack gourd bajji? Here is the recipe. Take a look...
Story first published: Tuesday, January 6, 2015, 17:42 [IST]
Desktop Bottom Promotion